விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் படம் "இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்' . ஆதவா, அவந்திகா, மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் அழகுராஜ். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய தாதாவின் உதவியை நாடிச்செல்கிறான் காதலன். அந்த தாதா நாயகனை எப்படியெல்லாம் தன் சூழ்நிலைகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் கதை.
தாதாவுடன் காதலியை தேடி காதலன் செல்கிறார். காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இறுதியில் காதலியை கண்டுபிடித்தார்களா இல்லையா? நாயகிக்கு திருமணம் யாருடன் நடந்தது? என்பதை நகைச்சுவையாக சொல்லுவதே படம். வரும் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் படம் திரைக்கு வருகிறது. ஒளிப்பதிவு சந்தான கிருஷ்ணன், இசை லியாண்டர் லீ மார்டின், தயாரிப்பு விகாஷ் ரவிச்சந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.வி.குப்பம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தில்லி-நொய்டா எல்லையில் ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம் - வன்முறையால் பதற்றம்: உஷாா் நிலையில் தில்லி காவல்துறை

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

ஈரான் கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த 2 கப்பல்கள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


