பிடித்த 10: வாழ்த்து மடல்கள் நிறைந்து இருந்தன!
நானும் என் மகனும் ஒன்றாக இருக்கும் இடமெல்லாம் எனக்கு மகிழ்ச்சியான இடம்தான். இங்குதான் படித்தேன்.


இடம்: நானும் என் மகனும் ஒன்றாக இருக்கும் இடமெல்லாம் எனக்கு மகிழ்ச்சியான இடம்தான். இங்குதான் படித்தேன். பின்னர் நடனம் கற்றுக் கொண்டு வேலை செய்வதும் இதே சென்னையில்தான். சென்னை மட்டும் தான் நான் விரும்பிய ஊர்களில் முக்கியமானது.
குடும்பத்துடன் சந்தோஷம்: நான், என் கணவர் மகேஷ், என் மகன் வித்யுத்தும் இணைந்து குடும்பமாக சுவிட்ஸர்லாந்து சென்றோம். அங்கு உயரமான ஓர் இடத்திற்கு சென்றோம். அதுதான் ஐய்ற்ங்ழ்ப்ஹந்ங்ய், ற்ர்ல் ர்ச் ற்ட்ங் உன்ழ்ர்ல்ங் என்று கூறுவார்கள். காரணம், கண்ணுக் கெட்டிய தூரம் வரை பனிகட்டிகளாக தெரிந்தது. எவ்வளவுதான் பாதுகாப்பான உடை இருந்தாலும் நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் என் மகன் தனது கையுறைகளை வீசி எறிந்து விட்டு ஐஸ் கட்டிகளை வெறும் கையினால் தூக்கி வீசி விளையாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு உடல் நிலை பாதிக்குமோ என்று பயம் இருந்தாலும், அவனுடன் விளையாடிய அந்த நேரம் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.
சாப்பாடு: என் அம்மாவின் கையால் சமைத்த எந்த சாப்பாட்டையும் நான் விரும்பி சாப்பிடுவேன். அரைத்துவிட்ட சாம்பார் என்று செய்வார்கள் அதே போல் புளிச்ச கீரை சாதம். என் தாயார் ரொம்ப கண்டிப்பானவர். நாம் விரும்பும் விஷயங்களை விட, நமக்கு நல்லது என்று அவர் நினைப்பதைதான் அவர் நமக்காக செய்வார். கீரை வகைகள் சத்துள்ளது என்று அவருக்குத் தெரியும். வாரம் ஒருமுறையாவது இந்த புளிச்ச கீரை சாதத்தை செய்துவிடுவார். ஒரு முறை நாங்கள் இருவரும் காரில் போய் கொண்டிருந்தோம். அன்று என்னால் காலையில் சாப்பிட முடியாத நிலையில் எனக்காக புளிச்ச கீரை சாதத்தை தன் கையால் பிசைந்து எடுத்து வந்திருந்திருந்தார். காரில் போகும் போதே எனக்கு ஊட்டிவிட்டார். அந்த நாளை நினைத்தால் இன்றும் எனக்கு அந்த சாப்பாட்டை நினைத்து மனம் ஏங்கும்.
கின்னஸ் விருது: இது சாதனையாளர்களின் விருது. ஒவ்வொரு முறையும் சாதிப்பவர்கள் அல்லது வேறு ஒருவரின் சாதனையை முறியடிபவர்கள் அடையும் உலகளாவிய விருது. சினிமா துறையில் உள்ளவர்களும் பெற்றிருக்கிறார்கள் என்றாலும் நான் பெறுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கலைஞர் டிவி "மானாட மயிலாட' ஒவ்வொரு முறையும் நாங்கள் ஏதாவது புதுமையை செய்யவேண்டும் என்று முயற்சி செய்வோம். அப்படி யோசிக்கும் போதுதான் ஒரு புதிய முயற்சியை செய்யலாம் என்று நினைத்தேன். அது இதுவரை செய்யாதது என்று தெரிந்தவுடன் நாங்கள் கின்னஸ் சாதனை அமைப்புடன் தொடர்பு கொண்டோம். அவர்கள் நேரிலேயே சென்னைக்கு வந்து, 45 நிமிடம் நிற்காமல் நடனம் ஆடியதை பார்த்து குறிபெடுத்துக் கொண்டார்கள். இதில் அந்த செட் தான் முக்கியம். அது அம்ங்ள் தர்ர்ம் ஞல்ற்ண்ஸ்ரீஹப் ஐப்ப்ன்ள்ண்ர்ய் என்ற முறையில் 1400 சதுர அடியில் அமைத்திருந்தோம். நடனம் ஆடி முடித்ததும் எங்களிடம் ஒன்றும் சொல்லாமல் லண்டனில் இருந்து சென்னைக்கு வந்திருந்த கின்னஸ் நிறுவன பெண்மணி தன் அறைக்கு சென்றார். எங்கள் எல்லாருக்கும் மனதில் "திக்.. திக்..' என்று அடித்துக் கொண்டது. அரைமணி நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தவர், எங்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டபொழுது, நான் பொறுமை இழந்து, ""நாங்கள் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுக்கிறோம். எப்படி இருந்தது எங்கள் நிகழ்ச்சி ? இதை சாதனையாக நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?'' என்று கேட்டபோது, ""உங்கள் நிகழ்ச்சி ரொம்ப அழகாக இருந்தது. நீங்கள் சாதித்து விட்டீர்கள்'' என்றார். இதை கேட்ட எங்கள் மாணவர்கள் என்னை அப்படியே மேலே தூக்கி விட்டார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பி வந்து அவருக்கு நன்றி சொன்னேன். ஆக, நானும் கின்னஸ் சாதனை விருதை வாங்கியவள் என்று கூறிக் கொள்வதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி.
தந்தையார்: ஈரோட்டில் கோபால ஐயர் என்றால் தெரியாத ஆட்களே இருக்க மாட்டார்கள் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு எல்லாருக்கும் தெரிந்த சமையல்காரர். அவருக்கு பிறந்த நாங்கள் 7 பேர். சென்னைக்கு குடியேறியதும் ஒரு தீபாவளி நெருங்கும்போது, "" நாம் ஏன் தீபாவளி பலகாரங்கள் செய்து விற்கக் கூடாது'' என்றுகேட்டார் அப்பா. நாங்கள் எல்லாம் தலை ஆட்டியவுடன், தியாகராய நகரில் உள்ள வெங்கடேஸ்வர கல்யாண மண்டபதில் தீபாவளி இனிப்புகள் மற்றும் கார வகைகளை செய்து விற்க ஆரம்பித்தோம். நான் அப்போது சிறுமி. என் அப்பா எங்களுக்காக உழைப்பதை பார்த்து ரசித்திருக்கிறேன். என் தந்தையார் இனிப்பு வகைகளை சிறப்பாக செய்வார். தீபாவளிக்கு முதல் நாளே எல்லாம் விற்று தீர்ந்துவிட்டது. அந்த அளவிற்கு அவரது கை பதம் இருக்கும்.
முதல் சமையல்: நான் க்ஹய்ஸ்ரீங் ம்ஹள்ற்ங்ழ் ஆகியிருந்த நேரம். எனக்கு ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று படப்பிடிப்பில் பங்கு கொண்டு வேலை செய்வேன். இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைதான் ஓய்வு. ஒரு ஞாயிறு அன்று என் அம்மா சொன்னதை பொய்யாக்கணும் என்று முடிவு செய்தேன். அம்மா, ""எப்பொழுதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டே இரு. சமைக்க கற்றுக் கொள்ளவே மாட்டியா'' என்றார். அன்று நான் சமைக்கும் போது அப்பா என்னை பார்த்துக் கொண்டே இருந்தார். அவருக்கு தன் பொண்ணு சமைப்பதை பார்த்ததும் சந்தோஷம் தாங்கவில்லை. எல்லா சகோதரிகளையும் என் வீட்டிற்கு அழைத்து அன்று எல்லோரும் தரையில் உட்கார்ந்து கொண்டு ஒன்றாக சாப்பிட்டோம். அன்று என் சந்தோஷம் நான் சமைத்ததில் இல்லை. என் பெற்றோரை மகிழ்வித்ததில்தான் இருந்தது.
தேசிய விருது: ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சிகாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நாட்டிய ஒத்திகையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தேன். என் சகோதரி நிர்மலாவின் கணவர் என்னை தொலைபேசியில் அழைத்து உங்களுக்கு விருது கிடைதிருக்கிறது. மலையாள தொலைக்காட்சியில் சொல்கிறார்கள் என்று கூறினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு எனது மாமா என்னை அழைத்து, ""உனக்கு சிறந்த நடன இயக்குநர் என்ற தேசிய விருது கிடைத்திருக்கிறது''என்று கூறினார். மலையாளத்தில் வெளியான "கோச்சு கோச்சு சந்தோஷங்கள்' என்ற படத்தில் 5 பாடல்கள். 5-ம் இளையராஜா இசையில் பல்வேறு வகை நாட்டியத்திற்கான பாடல்கள். 25 நாட்கள் உழைத்து இந்த பாடல் காட்சிகளை எடுத்தோம். சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் வெளியான படம் அது. அன்று இரவு வீட்டிற்கு வந்த போது பல்வேறு இயக்குநர்களின் வாழ்த்து மடல்கள் அறை எங்கும் நிறைந்து இருந்தன. அந்த நாளை என்னால் என்றும் மறக்க முடியாது.
உடை: உடை விஷயத்தில் நான் ஒரு பைத்தியம். படப்பிடிப்பிற்கு செல்லும் போது என் உடையை பார்த்தே அன்று என்ன நடனம் அமைத்திருக்கிறேன் என்று கூறிவிடலாம் என பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். சுடிதார் போட்டால் ச்ர்ப்ந் டான்ஸ், பேன்ட் ஷர்ட் என்றால் மாடர்ன் நடனம் என்று புரிந்து கொள்வார்கள். ஒரு முறை நான் தி.நகரில் உள்ள பாண்டி பஜாரில் ஒரு கடையில் "மானாட மயிலாட' கலா மாஸ்டர் வளையல் என்று கூறி விற்றுக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்தபோது இன்ப அதிர்ச்சி அடைந்தேன். நான் நடிகை இல்லை. சாதாரண தொழில் நுட்ப கலைஞர் தான். எனக்கு இந்த அளவில் பெயரா? என கண் கலங்கியது.
சந்திரமுகி: இந்தப் படத்தை என்னால் மறக்க முடியாது. இதில் ஜோதிகா ஆடிய நடனம் தான் சிறப்பானது. படப்பிடிப்பு முடிந்து, படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க நாங்கள் எல்லாரும் கூடினோம். ஜோதிகா என்னைப் பார்க்க, நான் அவரைப் பார்க்க, படம் திரையில் போட்டு முடிந்தவுடன் எல்லாரும் எங்களை பாராட்ட, நான் ஜோதிகாவை பாராட்ட, சந்தோஷ மழை தான். இந்த பாடல் சிறப்பாக வந்தால் நான் திருவனந்தபுரம் நகரில் உள்ள "ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில்' நடனம் ஆடுகிறேன் என்று வேண்டிக் கொண்டேன். அந்த பிரார்த்தனையையும் நிறைவேற்றினேன்.
டென்ஷன் இல்லாத நடனம்: நான் படப்பிடிப்பு முடியும் சமயம் தான் அதிகமாக டென்ஷன் ஆவேன். "ரட்சகன்' படத்தில் உள்ள "சோனியா' என்ற பாடல். சுஷ்மிதா சென், நாகார்ஜுனா இணைந்து நடனம் ஆடியது. வேலைசெய்வதே தெரியாமல் எடுத்த பாடல் காட்சி. இன்றும் நான் தலையில் துண்டைக் கட்டிக் கொண்டால் பாடல் முடியும் என்று அர்த்தம். பாடல் முடிகிறது என்றால் உடன் வேலை செய்பவர்கள் சந்தோஷப் படுவார்கள். ஆனால் அன்று எல்லோரும் வருத்தப்பட்டார்கள். ஏன் படப்பிடிப்பு முடிகிறது என்று. அந்த அளவிற்கு படப்பிடிப்பும் சரி, நடனமும் சரி என்னை மிகவும் மகிழ்ச்சி கொள்ள செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...