மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணையும் படம்? 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் "மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் "மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. "மாஸ்டர்' படத்துக்குப் பிறகு கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில்   கூறியிருப்பதாவது:

""இப்போதைக்கு இது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. இன்னும் பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது. எதுவும் முடிவாகவில்லை. என் அடுத்த படத்தை எழுத ஆரம்பித்திருக்கிறேன். மற்ற விஷயங்களைத் தயாரிப்பு தரப்பு தான் சொல்ல வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது என நினைக்கிறேன்'' இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.