எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கையினால் தயாரிக்கும் பொருள்களுக்கு தனிச்சந்தை

வீடுகளில் பெண்கள் தங்களது ஓய்வு நேரத்தில், கழிவு பொருள்களிலிருந்து பொம்மை, காகிதங்களிலிருந்து கம்மல், ஜிமிக்கி உள்ளிட்டவைகளைத் தயாரித்து, தங்களது தேவைக்கும், உறவினர்களுக்கும் வழங்குவது

News image
Updated On :13 டிசம்பர் 2020, 12:30 am

எஸ்.​ பால​சுந்​த​ர​ராஜ்

வீடுகளில் பெண்கள் தங்களது ஓய்வு நேரத்தில், கழிவு பொருள்களிலிருந்து பொம்மை, காகிதங்களிலிருந்து கம்மல், ஜிமிக்கி உள்ளிட்டவைகளைத் தயாரித்து, தங்களது தேவைக்கும், உறவினர்களுக்கும் வழங்குவது நடைமுறையில் உள்ளது.

தற்போது நெகிழி, இயந்திரமயம் உள்ளிட்டவைகளால் பாரம்பரிய கைவினைப்பொருள்கள் தயாரிப்பது குறைந்து வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம். இது போல கையினால் மரத்தைக் கொண்டு குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், வீடுகளில்  வைக்கப்படும் அழகு கைவினைப்பொருள்கள் தயாரிப்பு மிகவும் குறைந்துவிட்டது.எனினும் முற்றிலும் அழிந்து விடவில்லை என்பது நமக்கு சற்று ஆறுதல். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மரப்பாச்சி பொம்மை, கோயில் அலங்கார நிலைகள், வீட்டில் கலை நயமிக்கக் கதவுகள் என முழுக்க முழுக்கக் கையினால் தயாரிக்கப்பட்டு வந்தது.தொழிற்சார்ந்த கைவினைப்பொருள்கள் தயாரிப்பை கள்ளக்குறிச்சி அழியாமல் காப்பாற்றி வருவது பாராட்டுக்குறியது. இங்கு 15 ஆண்டுகளாக மர சிற்பக்கூடம் என்ற பெயரில் மரத்தினாலான கைவினைப்பொருள்களை எஸ்.விநோத்பாபு என்பவர் தயாரித்துச் சந்தைப்படுத்தி  வருகிறார்.

இது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: 

""நாங்கள் கோயில்களில் உற்சவர் வீதி உலா வரும் மயில், கருடன், உள்ளிட்ட வாகனங்களை முழுக்க முழுக்கக் கையினாலேயே தயாரிக்கிறோம். மேலும் வீடுகளில் வைக்கக்கூடிய கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகளைத் தயாரிக்கிறோம்.இது எங்களுக்கு பரம்பரை தொழில் . எனது முன்னோர்கள், குழந்தைகள் விளையாடும் செப்புசாமான்கள், கோலாட்டு, பம்பரம் உள்ளிட்டவைகளை கையினால்தான் தயாரித்தார்கள். தற்போது பம்பரம், செப்பு சாமான்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்க இயந்திரம் வந்து விட்டது.

கள்ளக்குறிச்சியில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மர பட்டறைகள் இருந்தன.இப்போது 10 பட்டறைகளே உள்ளன.முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது சுமார் நூறுக்கும் குறைவான  தொழிலாளர்களே  உள்ளனர்.முன்பு கருங்காலி மரத்தில் மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள். கருங்காலி மருத்துவக் குணம் கொண்டதால் இதை குழந்தைகள் விளையாடும் போது வாயில் வைத்தாலும் பாதிப்பு இருக்காது. சிலர் மரப்பாச்சி பொம்மைகளை தாய்வீட்டு சீதனமாகவும் கொடுத்தனுப்பும் பழக்கம் முன்பு இருந்தது.நாங்கள் கோயிலில்  உற்சவர் சுவாமி வீதி உலா வருவதற்கு குதிரை, மயில், சிம்மம், அன்னபட்சி மற்றும் கோயில் நிர்வாகிகள் கேட்கும் வாகன சிற்பங்களைச் செய்து கொடுப்போம். இவை அத்திமரத்தில் தயாரிக்கப்படுகிறது.

Story image

 முருகன், விநாயகர் உள்ளிட்ட சுவாமி உருவச்சிலைகள், யானை உள்ளிட்டவை தயாரித்து வண்ண பெயிண்ட் பூசி விற்பனை செய்து வருகிறோம்.சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகர்களிலிருந்து வியாபாரிகள் நேரில் வந்து விற்பனைக்குத்  தேவையானதை ஆர்டர் கொடுக்கிறார்கள்.  எங்கள் உழைப்புப் பல ஆண்டுகளுக்குச் சேதம் இல்லாமல் இருக்கும். முன்பு பெரிய வீடுகட்டும் போது, கதவு ஜன்னல் உள்ளிட்டவைகளில் மர வேலைபாடுகள் இருக்கும். தற்போது இயந்திரத்தில் தயாரிக்கிறார்கள். இயந்திர வரவால் எங்கள் தொழில் பாதித்துள்ளது எனினும் கையினால் தயாரிக்கும் பொருள்களுக்குத் தனிச் சந்தை உள்ளது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது.

தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் பணம் கொடுத்துப் பொம்மைகளை வாங்கிச் செல்வார்கள், தற்போது விற்றால் பணம் கொடுப்போம் என கூறி வருகிறார்கள். எனவே பூம்புகாருக்கு யாரும் பொருள்களை விற்பதில்லை.எங்களது தொழிலுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். மானியத்துடன் கடனும் வழங்க வேண்டும். பூம்புகார் நிறுவனம் முன்பு போல பணம் கொடுத்து பொருள்களை வாங்க வேண்டும். இதன் மூலம் இந்த தொழிற்சார்ந்த கைவினைப்பொருள்கள் தயாரிப்புகள் மேலும் சிறப்படையும்'' என்றார் விநோத்பாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.