ஒரு நாள் மகாராஜா ரஞ்சித் சிங் ஒரு மாமரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு கல் பறந்து வந்து அவர் மீது விழுந்தது. ஆனால், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
உடனே அருகில் இருந்த வீரர்கள். கல் எறிந்தது யார் என தேடி கண்டுபிடித்து ஒரு பெண்ணை கூட்டி வந்தனர்.
அந்தப் பெண், ""என்னை மன்னிச்சிடுங்க... மகாராஜா. நான் பசியில் இருந்தேன். அதனால் மரத்திலுள்ள ஒரு மாங்காய், விழுந்தால் அதனை சாப்பிடலாமே என கல்லை எறிந்தேன். ஆனால் அது எதிர்பாராத விதமாய் தங்களை தாக்கி விட்டது. என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்'' என மீண்டும் கூறினாள்.
மன்னர்.. உடனே உதவியாளரை அழைத்து கொஞ்சம் பணம் வாங்கி அதனை அந்த பெண்ணிடம் கொடுத்தார்.
இதனை அருகில் இருந்த பலர் எதிர்பார்க்கவில்லை. கல் எறிந்த பெண்ணுக்கு, பணத்தை கொடுக்கிறாரே இது சரியா? என கேட்டனர்.
அதற்கு மகாராஜா, ""அந்த பெண் பசியில் இருந்தாள். கல்லை மரத்திலுள்ள மாங்காய் மீது தான் எறிந்தாள். பதிலுக்கு மாங்காய் விழுந்திருந்தால் அதனை எடுத்து பசியை ஆற்றிக் கொண்டிருப்பாள். அந்த மரமே, கல் எறிந்த பெண்ணுக்கு மாங்காயை தரும் போது, மகாராஜா மரத்தை விட உயர்ந்தவர் அல்லவா, அதனால் நான் அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுத்தேன்'' என்றார். கேள்வி கேட்டவர்கள் வாயை மூடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


