ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் சிறிய படகுகளைக்கூட சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தின. இதனையடுத்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வந்தது. இதனைத் தொடர்ந்து, இரு வாரங்களுக்கு போர் நிறுத்தம் செய்யப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். போர் நிறுத்தம் முடிந்தபிறகும், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மீண்டும் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக புதன்கிழமையில் (ஏப். 22) அறிவித்தார்.
இதனிடையே, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. அதுமட்டுமின்றி, நீரிணையில் கண்ணிவெடிகளையும் பதித்தது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பதிக்க முயற்சிக்கும் எந்தக் கப்பலாக இருந்தாலும், சிறிய படகாக இருந்தாலும் சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிவிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, "ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தப் படகாக இருந்தாலும் சரி, சுட்டு வீழ்த்துமாறு உத்தரவிட்டுள்ளேன். இதில் சிறிதும் தயக்கம் காட்டக் கூடாது.
மேலும், கண்ணிவெடியை அகற்றும் நமது கப்பல்கள், தற்போது நீரிணையைச் சுத்தம் செய்து வருகின்றன. அந்தப் பணியை மூன்று மடங்கு அளவில் தொடருமாறு உத்தரவிடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Summary
US President Donald Trump orders navy to attack any boats laying mines in strait of Hormuz
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!
ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




