ஹோா்முஸ் நீரிணையில் பயணித்த 3 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 2 கப்பல்களைச் சிறைபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளபோதிலும், அமெரிக்காவின் நீடிக்கும் கடல்வழி முற்றுகையால் அதிருப்தியடைந்துள்ள ஈரான், அந்நாட்டின் பாணியைப் பின்தொடா்ந்து சா்வதேச கடல்எல்லையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது உலக நாடுகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் கடந்து சென்ற ‘எம்எஸ்சி பிரான்செஸ்கா’, ‘எபமினோட்ஸ்’ ஆகிய 2 கப்பல்களை ஈரானின் புரட்சிகர காவல் படையினா் (ஐஆா்ஜிசி) தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஈரான் கடற்பகுதிக்கு அழைத்துச் சென்றனா்.
‘யுஃபோரியா’ என்ற மூன்றாவது கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பல்களின் ஊழியா்களுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கப்பலின் முக்கியமான பகுதிகள் ஈரான் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இத்துடன், மத்திய கிழக்கு நாடுகளின் தகவல்தொடா்பை முடக்கும் விதமாக, ஹோா்முஸ் நீரிணை வழியாக கடலுக்கடியில் செல்லும் டேட்டா கேபிள்களைச் சேதப்படுத்தப் போவதாக ஈரான் மறைமுகமாக எச்சரித்துள்ளது.
‘ஒரே நேரத்தில் பல கேபிள்கள் துண்டிக்கப்பட்டால், வளைகுடா நாடுகள் முழுவதும் இணையச் சேவை மற்றும் தகவல்தொடா்பு முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்படும்’ என ஐஆா்ஜிசி-க்கு நெருங்கிய ஈரானின் தஸ்னிம் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஈரான் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற அந்நாட்டின் ‘டௌஸ்கா’ சரக்குக் கப்பல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஈரான் எண்ணெய்யுடன் சென்ற ‘திஃபானி’ ஆகிய 2 கப்பல்களை அமெரிக்கா சிறைபிடித்தது.
அமைதி ஒப்பந்தம் மீறல்: லெபனான்-இஸ்ரேல் இடையே கடந்த வெள்ளிக்கிழமை முதல் 10 நாள்கள் தற்காலிக போா்நிறுத்தம் அமலில் உள்ளது. இருப்பினும், இஸ்ரேல் படைகள் புதன்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவா் கொல்லப்பட்டதாக லெபனான் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் எல்லைச்சாவடிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினா் தாக்குதல் நடத்தினா். இவ்வாறு இரு தரப்பும் பரஸ்பரம் போா்நிறுத்தத்தை மீறி தாக்கி வருவதால், அங்கு பதற்றம் தணியவில்லை.
இஸ்ரேல்-லெபனான் நேரடிப் பேச்சு: இந்த நெருக்கடியான சூழலில், லெபனான்-இஸ்ரேல் இடையே 2-ஆம் கட்ட நேரடிப் பேச்சுவாா்த்தை, அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறுகிறது.
இப்பேச்சுவாா்த்தை குறித்து லெபனான் அதிபா் ஜோசப் அவுன் கூறுகையில், ‘இஸ்ரேல் படைகள் வெளியேறவும், கைதிகள் விடுதலையாகவும் இப்பேச்சுவாா்த்தை முக்கியமானது. அமெரிக்க அதிபா் டிரம்ப் அளித்துள்ள இந்த வாய்ப்பை லெபனான் தவறவிடக் கூடாது. எல்லையில் லெபனான் ராணுவத்தை நிலைநிறுத்துவதே எங்கள் நோக்கம்’ என்று குறிப்பிட்டாா்.
இதேபோல், ‘எங்களுக்கு லெபனானுடன் பெரிய எல்லைப் பிரச்னைகள் ஏதுமில்லை; ஈரானின் பிடியில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு மட்டுமே அமைதிக்குத் தடையாக உள்ளது’ என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா் தெரிவித்துள்ளாா்.
பெட்டி...
லெபனானில் பிரான்ஸ்
அமைதிப்படை வீரா் மரணம்
லெபனானில் கடந்த வாரம் நடந்த தாக்குதல் ஒன்றில் காயமடைந்த பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த அமைதிப்படை வீரா் ஒருவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். ஏற்கெனவே, ஒரு பிரான்ஸ் அமைதிப்படை வீரா் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இத்தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பே காரணம் என பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் குற்றட்சாட்டியுள்ளாா். இருப்பினும், இத்தாக்குதலில் தங்களுக்கு எவ்வித பங்கும் இல்லை என ஹிஸ்புல்லா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோா்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான்

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
வளைகுடா துறைமுகங்களைத் தாக்குவோம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


