கரோனாவால், கடந்த 80 ஆண்டுகளில் நினைத்துக்கூட பார்த்திராத வகையில், தற்போது சர்வதேச அளவில் அனைவரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மீண்டும் விளையாடப்பட்டாலும், சகஜநிலைக்கு வீரர்கள் வருவது மிகவும் சவாலான விஷயம். முதலில் உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தந்து போட்டிகளை வடிவமைக்க வேண்டும். பிறகு படிப்படியாக வெளிநாட்டு போட்டிகளை முடிவு செய்யலாம். அனைத்து நாடுகளுமே மொத்தத்தில் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், உள்ளூர் போட்டிகளில் முதலில் கவனம் செலுத்துவதே சரியாக இருக்கும்.
கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் விளையாடப்பட்டாலும், தங்களை மீட்டு நிலைநிறுத்திக் கொள்ள வீரர்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படும். அது எவ்வளவு பெரிய வீரரானாலும் இது ஒரு தொடர் கண்காணிப்பில் வீரர்கள் முதலில் தனியாக வீரர்கள் பயிற்சி எடுக்கலாம். பின்பு, முகாம்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்படலாம். இவையெல்லாம் ஊரடங்கிற்குப் பிறகு அரசு மற்றும் பிசிசிஐ அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும்.
ஊரடங்கிற்குப் பின்பு பி.சி.சி.ஐ உள்ளிட்ட உலகின் அனைத்து போர்டுகளும் உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
ஐ.பி.எல்லை கையாள்வது எளிது. உள்ளூர் போட்டிகளிலும் முதலில் ஐபிஎல் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
""தற்போது வீரர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் கரோனாவை அடுத்து பயிற்சிகளில் பங்கேற்கும்போது, நான் சொன்ன விஷயங்கள் அவர்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும்'' என்கிறார் ரவி சாஸ்திரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


