""கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், பூவாணம் குப்பத்தில் வசித்து வரும் மாணவி சுபஸ்ரீ தனியார் கலைக் கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் ஆண்டுப் படிப்பதாகவும் தன் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குடும்பத்துக்குத் தற்போது வருமானம் இல்லாத நிலையில் ரூ.8 ஆயிரம் கல்வி கட்டணம் செலுத்த இயலாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
நண்பர்கள் மூலம் அவருடைய குடும்ப நிலவரம் குறித்து விசாரித்தபோது, மிக ஏழ்மையான குடும்பம் என்று தெரியவந்தது .அதோடு அந்த மாணவியின் தம்பி பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்றும் தெரிய வந்தது. அந்தக் குடும்பத்திற்கு ஒரே ஒரு நம்பிக்கைச் சுடரான சுபஸ்ரீ படிப்புக்கும் தடை வந்துள்ளது என்பதனை உறுதி செய்தோம்.
அடுத்தடுத்து உதவி கொண்டிருக்கும் நண்பர் சிங்கப்பூர் ஞானப்பிரகாசத்திடம் விஷயத்தை எடுத்துச் சொன்னேன். அடுத்த நிமிடமே பண உதவி செய்ய ஒத்துக் கொண்டார். கடலூர் பூவாணம் குப்பத்திற்குச் சென்று பணத்தை ஒப்படைத்து வந்தோம். சுபஸ்ரீ இறுதி செமஸ்டர் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் 80% மதிப்பெண் பெற்று முதுநிலைப் பட்டப்படிப்பின் முதல் ஆண்டு சேர்ந்துள்ளார். இதற்கான கட்டணத்தையும் ஞானப்பிரகாசம் ஏற்றுக்கொண்டார்.
உதவி தகுதியானவர்களுக்குப் போய் சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உதவி கேட்ட நபரின் குடும்பச் சூழ்நிலையை நன்கு விசாரித்த பிறகுதான் உதவிகளைச் செய்வோம். அதை வாட்ஸ் அப்பில் பதிவும் செய்வோம். .எங்களது செயல்பாட்டை கூர்ந்து கவனித்து வரும் அயல் நாட்டு நண்பர்கள், நாங்கள் பரிந்துரைபவர்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றனர். உதவுகிறவரையும், உதவி பெருகிறவரையும் பேசச் செய்து உதவி உரியவர்களைச் சென்று அடைந்துள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளும்படி செய்வதால் குறிப்பாக வெளிநாட்டில் வாழும் தமிழ் அன்பர்கள் எங்கள் மூலம் உதவ முன்வருகிறார்கள்.
மேலும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் வழங்கியுள்ளார். நிதி உதவி கேட்டு "உதவும் கைகள்...' குழுவில் வேண்டுகோளை பதிவு செய்த சில நிமிடங்களிலேயே அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது.
""மகளைக் கல்லூரியில் சேர்ப்பதற்கு உதவ வேண்டும்'' என்று கல்யாணி என்பவர் எங்களைத் தொடர்பு கொண்டார். கல்யாணிக்கு கணவர் இல்லை. ""உடனடியாக ரூ 10 ஆயிரம் செலுத்தினால்தான் சீட் கிடைக்கும்'' என்றார். இதேபோல விருகம்பாக்கத்திலிருந்து சாந்தி போன் செய்து தன் மகன் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கு ரூ 5400 வேண்டும் என்று தெரிவித்தார்.

இவர்களின் பொருளாதாரச் சூழலை விசாரித்து அறிந்து "இப்போது உதவாவிட்டால் இரண்டு பேரின் படிப்பு தடைபட்டுவிடும்' என்பதினால் மீண்டும் சிங்கப்பூரில் உள்ள என் நண்பர் ஞானப் பிரகாசத்திடம் உதவி கேட்டேன்.அவர் உடனடியாக 15 ஆயிரத்து நானூறு ரூபாய் பணம் அனுப்பி உதவினார். கட்டணங்களைக் கட்டிவிட்டு, ஒப்புகை ரசீதினை பண உதவி செய்தவருக்கு அனுப்பி வைத்தேன்.
இப்படியாகப் பலரும் உதவி கேட்டு வருகிறார்கள். அவர்களின் வறுமையை முழுமையாகத் தீர்க்க நண்பர்களை நாடியுள்ளோம். விரைவில் அவருக்கு ஒரு கணிசமான நிதியினை அளிக்கவுள்ளோம். பணம் இல்லாமல் யாருடைய கல்வியும் தடைப்படக்கூடாது என்பது தான் எங்கள் எண்ணம்'' என்கிறார் வெங்கடேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


