விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தெலுங்குப் பிரபலம் வீடு பரிசளித்தாரா?

"தடையற தாக்க', "என்னமோ ஏதோ', "தேவ்', "தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் பிரீத் சிங் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 12:30 am

DIN


"தடையற தாக்க', "என்னமோ ஏதோ', "தேவ்', "தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் பிரீத் சிங் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது கமல்ஹாசனுடன் "இந்தியன் 2', சிவகார்த்திகேயனின் "அயலான்" ஆகிய படங்களில் நடிக்கிறார்.  சமீபத்தில் போதை பொருள் வழக்கில் போலீசார் சம்மன் அனுப்பி ரகுல்பிரீத் சிங்கை விசாரித்தது பரபரப்பானது. ரகுல் பிரீத் சிங் ஹைதராபாத்தில் புதிதாக வீடு வாங்கிக் குடியேறி இருக்கிறார்.

இந்த வீட்டை ஆந்திராவைச் சேர்ந்த சினிமா பிரபலம் பரிசாக அவருக்குக் கொடுத்ததாக செய்திகள் வந்தன. நடிகை சமந்தா நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரகுல் பிரீத் சிங் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். ""நான் வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களைப் பொருட்படுத்துவது இல்லை. ஹைதராபாத்தில் நான் வசிக்கும் வீட்டை  பிரபலம் ஒருவர் எனக்குப் பரிசாகக் கொடுத்ததாகத் தொடர்ந்து வதந்திகள் வருகின்றன. இது பெரிய அபத்தம். வீட்டை யாராவது பரிசாக கொடுப்பார்களா?. நான்தான் அந்த வீட்டை வாங்கினேன்.''” என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.