மறக்காமல் நடைப்பயிற்சி செய்யுங்கள்

​உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து விட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
மறக்காமல் நடைப்பயிற்சி செய்யுங்கள்
Updated on
1 min read


உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து விட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன..

நடைப்பயிற்சி, நம் உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அளித்து உடல் உறுப்புகளை சீராக செயல்பட உதவுகிறது.

நடைபயிற்சி மேற்கொள்வதால், இடுப்பளவு மற்றும் வயிற்று பகுதியில் உள்ள அதிகப்படியான சதைப் பகுதியை குறைக்க உதவுகிறது.

நடைப்பயிற்சி ரத்த அழுத்தத்தைத் குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்

தொடர்ச்சியான நடைப்பயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் அடிக்கடி அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.

உடல் எடையை மிகவும் எளிதில் குறைக்க உதவும் வழிகளுள் ஒன்று நடைப்பயிற்சி. ஒரு நாளில் ஒருவர் 30 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சியை மேற்கொண்டால், 150 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையில் மாற்றம் தெரியும்.

நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:

 நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.

 நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.

 அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.

 முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.

 அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது.

 மூட்டுகளை இலகுவாக்குகிறது.

 எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.

 கால்களையும், உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது.

 "கொலஸ்ட்ரால்' அளவைக் குறைக்கிறது.

 மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

 உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.

 நல்ல தூக்கம் வர உதவுகிறது.

 கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.

 உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும்.

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்

இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் வீசி, நிமிர்ந்த உடலுடன் வேகமாக நடைபோடுவதுதான் உண்மையான பயிற்சி.

உடல் எடையை குறைக்க நடைபோடுபவர்கள், நொறுக்குத்தீனிகளை கொறித்துக்கொண்டே சென்றால், நடப்பதில் எந்தப் பயனும் இல்லை.

அதிகமாகப் பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல.

மேடு, பள்ளம் உள்ள இடத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com