தொடரும் சவால்
"பிக்பாஸ் 4' தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தேவி நாகவள்ளி. இவர் தேசிய பசுமை நடவு திட்டத்தின் மூலம் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டார்.


"பிக்பாஸ் 4' தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தேவி நாகவள்ளி. இவர் தேசிய பசுமை நடவு திட்டத்தின் மூலம் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டார். அதைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு இதேபோல் மரக்கன்று நட நடிகை மீனாவுக்கு சவால் விடுத்தார். நடிகை நாகவள்ளியின் சவாலை ஏற்று நடிகை மீனாவும் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டார்.
""சுற்றுச்சுழல் மாறிக்கொண்டே இருப்பதால் பசுமையைப் பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். இது இயற்கைக்கும் மண்ணிற்கும் நாம் செய்யும் நன்றி கடன்'' என மீனா தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட நடிகர் சுதீப், நடிகைகள் மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தொடர மீனா சவால் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...