பெண்களுக்கு முழு அதிகாரம்!

தாய்லாந்து மக்கள் கடைபிடிக்கும் கலாசாரங்கள் பழங்கால பாரம்பரிய கலாசாரம் ஆகும்.
பெண்களுக்கு முழு அதிகாரம்!
Published on
Updated on
1 min read


தாய்லாந்து மக்கள் கடைபிடிக்கும் கலாசாரங்கள் பழங்கால பாரம்பரிய கலாசாரம் ஆகும். பெரும்பாலும் புத்தமத சமயத்தை சார்ந்து இருக்கிறது. மேலும் இந்திய, சீனா, கம்போடியா மற்றும் தெற்கு ஆசியாவின் கலாசார கலவைகள் இங்கு காணப்படுகிறது. இங்கு பல இன மக்கள் வாழ்கின்றனர்.  

இதில் மியான்மர், லாஸ், கம்போடியா மற்றும் மலேசியா போன்ற நாட்டு மக்களும் இங்கு வாழ்வதால் பல கலாசாரங்களின் கலவையை இங்கு பார்க்க முடியும். பல்வேறு நாட்டு மக்கள் இங்கு வசிக்கும் சூழ்நிலையில், அவர்களது கலாசாரங்களுக்கு இங்கு மதிப்பளிக்கப்படுகிறது. இதன் காரணமாக சீனா மற்றும் தாய்லாந்து இடையே ஓர் நீண்ட கால வியாபார ரீதியான ஒரு இணக்கம் உள்ளது. 

பிறநாட்டினர் இங்கு உள்ள மக்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு அதிகாரப்பூர்வமான எழுத்து வடிவ கடிதம் தேவை. முக்கியமாக அது தாய் மொழிக்கு மொழிமாற்றம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் காதல் திருமணங்கள் இங்கே அதிகமாக நிகழ்கின்றன. கணவனை தேர்ந்தெடுப்பதில் பெண்ணிற்கு முழு அதிகாரம் கொடுக்கப்படுகிறது.

தாய்லாந்து நாட்டின் வருவாயில் 6% சுற்றுலாத்துறையின் மூலம் பெறப்படுகிறது.. தாய்லாந்தில் பிரபலமான சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக டைவிங், அழகான கடற்கரைகள், நூற்றுக்கணக்கான தீவுகள், இரவு விடுதிகள், மலையேற்றம், போன்றவை இங்கு முக்கியமானவை. இங்கு 40,000-க்கும் மேற்பட்ட புத்த கோயில்கள் உள்ளன.  மேலும் பல கலாசார திருவிழாக்களும் இங்கு நடக்கின்றன.

தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரம் சுற்றுலா வாசிகள் விரும்பும் ஒரு முக்கியமான நகரம். இங்கு நிறைய ஷாப்பிங் மால்கள், சுற்றுலாவாசிகளுக்கென பிரத்தியேக இரவு நேர கடைகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com