வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பறந்து கொண்டே ரசிக்கலாம்!

வெளிநாடுகளைப் போன்று பலூனில் பறந்த படியே விலங்குகளையும், பறவைகளையும் ரசிக்கும் வசதி நமது இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :2 மே 2021, 12:30 am


வெளிநாடுகளைப் போன்று பலூனில் பறந்த படியே விலங்குகளையும், பறவைகளையும் ரசிக்கும் வசதி நமது இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது. 
மத்தியப் பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் 716 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பந்தாவ்கர் தேசியப் பூங்கா உள்ளது. இங்கு, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்களின் வாழ்விடமாக இந்தப் பூங்கா உள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக இந்த தேசிய பூங்காவில் வெப்பக்காற்று நிரப்பிய பலூனில் பறந்து சென்று வன விலங்குகளை கண்டுகளிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இது பற்றி கேட்ட போது, மியான்மரில் தான் இது போன்று பலூனில் பறந்து கொண்டே நகரங்களை சுற்றி பார்க்கும் வசதியுண்டு. 

இப்போது மத்திய பிரதேசத்திலும் இது போன்ற விலங்குகளையும், பறவைகளையும் பறந்து கொண்டே பார்ப்பது புதிய அனுபவமாக உள்ளது. இதற்காக சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது கரோனா காலம் என்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி பூங்கா மூடப்
பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே முதன்முறையாக விலங்குகள் சரணாலயத்தில் பறந்து கொண்டே விலங்குகளை ரசிக்கும் திட்டம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.