அந்த வீட்டு அம்மா, "இருங்கள்' என்று கூறி விட்டு உள்ளே போன நேரம் அந்த பெரிய மனிதரும் வந்து விட்டாராம். இந்த வீட்டுக்கார அம்மா இரு பை நிறைய அரிசி, பருப்பு, காய்கறிகளை எல்லாம் கொண்டு வந்து இவர்களிடம் கொடுக்கும் போது, அந்தப் பெரிய மனிதர் வந்து அதைத் தடுத்து நிறுத்தினாராம். அந்த இரு பைகளையும் பார்த்த நாங்கள், இன்று வயிறார சாப்பிடலாம் என்று நினைத்தார்கள். அந்தப் பெரிய மனிதர் தடுத்து நிறுத்தியதும், மிகவும் சோர்ந்து போய் விட்டார்கள். "யார் இவர்கள், இவர்களுக்கு இதை எல்லாம் நீ ஏன் கொடுக்கிறாய்?' என்று கேட்டார். அந்தப் பெரிய மனிதரின் வீட்டுக்கார அம்மா, "'இவர்கள் எல்லாம் நம்ம ஊருக்கு வந்த நாடகக் குழு. இந்தக் குழுவின் நாடகம் வசூல் ஆகவில்லை. நாடகத்தில் நடித்தவர்கள் எல்லோரும் பட்டினியாக இருக்கிறார்களாம். அது தான் உங்களைப் பார்த்து, உங்கள் தலைமையில் நாடகம் நடத்த, உங்களை அழைக்க வந்திருக்கிறார்கள்'' என்று கூறினார்கள்.