தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

புதிய ரக இட்லி  

பெங்களூருவில்  குச்சி இட்லி அறிமுகமாகியிருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த  புதிய ரக   இட்லிக்கு பலத்த வரவேற்பும் கண்டனங்களும் கிளம்பியுள்ளன. 

News image
Updated On :10 அக்டோபர் 2021, 12:30 am


பெங்களூருவில் குச்சி இட்லி அறிமுகமாகியிருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த புதிய ரக இட்லிக்கு பலத்த வரவேற்பும் கண்டனங்களும்கிளம்பியுள்ளன.

இட்லி மாவை குல்ஃபி வடிவத்தில் ஊற்றி அதில் பட்டையான ஐஸ் குச்சியை செருகி வேக வைத்து குச்சி இட்லியாக பெங்களூருவில் பல உணவகங்களில் வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இட்லியை கைவிரல்களால் பிட்டு... சாம்பார் சட்னியைத் தொட்டு சாப்பிடாமல், குச்சியைப் பிடித்து குல்ஃபி இட்லியை சாம்பார் சட்னியைத் தொட்டு சாப்பிடலாம். இந்த முறையில் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டிய அவசியம் வராததால் தண்ணீர் செலவு குறைகிறது என்கிறார்கள்.

மறுபுறம், குச்சியின் பயன்பாடு அதிகமாகும். அதனால் குச்சி தயாரிக்கப்படும் மரங்களுக்கு ஆபத்து என்கிற வாதமும் வைக்கப்படுகிறது.

இட்லியை விரல்களால் எடுத்து, சாம்பார் சட்னியைத் தொட்டு விரல்களால் வாயில் வைத்து உண்பதில் உள்ள ஆனந்தம் இந்த குச்சி இட்லியை உண்பதில் வராது என்று பெரிய விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

என்ன தான் குச்சியை இட்லி மாவில் வைத்து வேக வைத்தாலும், ஐஸ் குச்சியைப் பிடிக்கும் பிடிப்பு இட்லியில் வராது. ஏனென்றால் இட்லி அரிசி மாவில் தயாராவது. தவிர இட்லி பூ போன்று மென்மையாக இருக்க வேண்டும். இட்லி கல் மாதிரி இருந்தால் குச்சியில் பிடித்தம் வரும். இட்லி மென்மையாக இருக்கும் பட்சத்தில் குச்சி இட்லி சாப்பிடும்போது இட்லி கீழே விழுந்து மேஜையில் பட்டு தெறித்து உடையில் சாம்பார் சட்னி தெறிக்கும் அபாயமும் இருக்கிறது என்கின்றனர் நெட்டிசன்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.