ஆட்டோ ஓட்டும்  விரிவுரையாளர்...!

நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவது பெரிய வித்தை அல்ல என்றாலும் ஆங்கிலம் சரளமாகப் பேசுவது இந்தியர்களில் அநேகருக்குச் சற்று சிரமமான விஷயம் தான்.
ஆட்டோ ஓட்டும்  விரிவுரையாளர்...!
Published on
Updated on
1 min read


நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவது பெரிய வித்தை அல்ல என்றாலும் ஆங்கிலம் சரளமாகப் பேசுவது இந்தியர்களில் அநேகருக்குச் சற்று சிரமமான விஷயம் தான். சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் சிறுவன் ... பாசி, மணி, ஊசி விற்கும் நரிக்குறவர் பெண்... அருமையாக ஆங்கிலம் பேசி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளனர்.

பெங்களூருவில் ஆட்டோ டிரைவர் அழகாக ஆங்கிலம் பேச... அதைக் கேட்ட பெண் பயணி மலைத்துப் போய் "எப்படி உங்களுக்கு இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேச முடிகிறது' என்று வியப்பில் கேட்க... "நான் முன்னாள் ஆங்கில விரிவுரையாளர்' என்று சொல்லி இன்னும் அதிகமாக வியப்பூட்டுகிறார்.

பட்டாபிராமன். வயது 74 . பெங்களூரு சாலைகளில் ஆட்டோ ஓட்டுபவர். "ஆங்கிலத்தில் எம். ஏ .... பிறகு எம். எட் படித்திருந்தாலும் எனக்கு கர்நாடகத்தில் வேலை கிடைக்காததால் மும்பை சென்று தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தேன். தனியார் கல்லூரி என்பதால் சம்பளம் குறைவாகக் கொடுத்தார்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஓய்வு ஊதியம் இல்லை. அதனால் ஓய்வு பெற்ற பின் 14 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

சொந்த வீடு கிடையாது. வாடகை வீடு. மாதம் ரூ. 12000 வீட்டு வாடகை. வாடகையை மகன் கொடுத்துவிடுகிறான். அதற்கு மேல் மகனைத் தொந்தரவு செய்வது சரியில்லை. நான் தினமும் சுமார் ரூ. 1000 சம்பாதிக்கிறேன். எனக்கும் மனைவிக்கும் அது போதும். நன்றாகக் படித்திருந்தும் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டதே என்று நான் யாரையும் குறை சொல்வதில்லை. யாரிடமும் குறையாகச் சொன்னதில்லை. உள்ளதை வைத்து திருப்திபடுகிறேன்'' என்கிறார் பட்டாபிராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com