சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சரத்குமாரின் பரம்பொருள்

இளம் நடிகர் அமிதாஷ் பரம்பொருள் எனும் பரபரப்பான கிரைம் டிராமா படத்திற்காக நடிகர் சரத்குமாரோடு இணைந்துள்ளார்.  

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 11:18 am

தினமணி

இளம் நடிகர் அமிதாஷ் பரம்பொருள் எனும் பரபரப்பான கிரைம் டிராமா படத்திற்காக நடிகர் சரத்குமாரோடு இணைந்துள்ளார்.  கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான இந்தப் படத்தை இயக்குநர் ராமிடம் உதவியாளர் அரவிந்த் ராஜ் எழுதி இயக்குகிறார். சிலைக்கடத்தல் குற்றங்களின் பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

குடும்பச் சூழலில் சிக்கித் தவிக்கும் இளைஞனாக அமிதாஷும், மாறுபட்ட காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சரத்குமாரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தில், கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி இடம்பெற்றுள்ளார்.  பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், ப சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களை ஏற்கின்றனர். யுவன் ஷங்கர்ராஜா இசையில் படத்தில் நடிக்கும் அமிதாஷ் பாடகராக உருவெடுத்துள்ளார். 

பிரபல பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவன் உடன் இணைந்து அமிதாஷ் பாடியுள்ள "சிப்பர ரிப்பர' என்ற துள்ளலான பாடல் வெளியாகியுள்ளது. "ரிச்சி' படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார் இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, டான், சாணிக் காகிதம், ராக்கி, எட்டு தோட்டாக்கள் படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் இப்படத்தை எடிட் செய்துள்ளார்.

கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். கவி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக மனோஜ் மற்றும் கிரீஷ் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.