சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வந்தியத்தேவனாக கார்த்தி

டிஜிட்டல் யுகத்திலும் இளைய தலைமுறை வாசகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்' எனும் சரித்திர நாவல் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2022, 12:30 am

DIN

டிஜிட்டல் யுகத்திலும் இளைய தலைமுறை வாசகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்' எனும் சரித்திர நாவல் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. 

இதன் முதல் பாகம் கிட்டத்தட்ட தயார். இப்படத்தில்  வந்தியத் தேவனாக நடித்திருக்கும் நடிகர் கார்த்தி, போர்க்கள காட்சியிலும், வீரம் செறிந்த காட்சியிலும் டூப் போடாமல் நிஜமாக சண்டைக் காட்சிகளில் நடித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக படக்குழுவினர் பேசுகையில்,  ""வந்தியத்தேவன் வேடத்தில் நடிக்கும் கார்த்தி, படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் அவரே பயிற்சியையும், ஒத்திகையும் மேற்கொண்டு நடித்து அசத்தினார். குதிரையேற்றம், வாள் வீச்சு, வில் அம்பு எய்தும் பயிற்சி என பல சண்டைக் காட்சிகள் மற்றும் வீரம் செறிந்த காட்சிகளில் ஒருமுகமான மனதுடன் ஈடுபட்டு, பயிற்சியாளரின் வழிகாட்டலுடன் படப்பிடிப்பு தளத்தில் நடித்தார். படத்தின் இயக்குநரான மணிரத்னம், கார்த்தியின் அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பை கண்டு வியந்து, விழிகள் விரிய, சிறிய புன்னகையுடன் முதுகில் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். திரையில் வந்திய தேவனை ரசிகர்கள் காணும் போது, நடிகர் கார்த்தியின் நடிப்பை கண்டு வியப்பது உறுதி'' என்றனர். இதனிடையே "விருமன்', படம் வெளியாகியுள்ள நிலையில் "சர்தார்' என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.