விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஹங்கேரியத் திரைப்படம்

இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஜெர்மனியில் நான் ஜெர்மன் தேசத்தில் கீர்த்தியுடன் விளங்கினேன். நாஜிக்களின் அரசாட்சி.

News image
Updated On :18 டிசம்பர் 2022, 12:30 am

எஸ்.குரு

அரசியல்வாதியின் ஆணவம்

தலைப்பு- மீபிஸ்டா
இயக்குநர்- இவ்த்வான் சாபோ
வெளியான ஆண்டு- 1981
ஓடும் நேரம்- 146 நிடங்கள்
கதாநாயகன் ஒரு ஜெர்மன் நாடக நடிகன்.  

கதையில் அவர் சொல்வது இதோ:

இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஜெர்மனியில் நான் ஜெர்மன் தேசத்தில் கீர்த்தியுடன் விளங்கினேன். நாஜிக்களின் அரசாட்சி.

அன்று என் நாடக நடிப்பைப் பார்க்க ஜெர்மன் ராணுவ உயர் அதிகாரி வந்திருந்தார். நாடக நிகழ்ச்சியின்போது, எனக்கு பலத்த கைத்தட்டல். நாடகம் முடிந்ததும் ஜெர்மன் ராணுவ அதிகாரி என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.

""உங்கள் நடிப்பு பிரமாதம். இன்று நான் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளுங்கள்.  உங்களுடன் அருகே அமர்ந்திருப்பது எனக்குப் பெருமை'' என்றார். அவர் என் ரசிகராகிவிட்டார் என்பதை உணர்ந்தேன். ஆனால் கூடிய சீக்கிரத்திலேயே அவரது கோர முகத்தை நான் தரிசிப்பேன் என்று என் கனவிலும் நினைக்கவில்லை. சில முறை அவர் என் வெவ்வேறு நாடகங்களுக்கு வந்தார். அந்தச் சந்திப்புகளிலும் அவர் மிகுந்த கனிவுடன் பேசினார்.

என் யூத நண்பன் ஒருவன் நாஜி போலீஸ் அதிகாரிகளின் அராஜகத்துக்கு ஆளாகினான். "என் செல்வாக்கைப் பயன்படுத்தி யூத நண்பனை மீட்டு எடுக்கலாம்' என்று நினைத்தேன். ராணுவ உயர் அதிகாரியைச் சந்தித்துப் பேசினேன். அவரோ தன் சுயரூபத்தைக் காட்டினார்.

"அரசியல் விவகாரங்கில் தலையிடாதே! என் முன் நிற்காதே! வெளியே போ!'' என்று சுள்ளென்று கத்தி,  கோர முகத்தைக் காட்டினார். என் யூத நண்பன் நாஜிக்களின் அராஜகத்தில் மடிந்து போனான். எனக்கு ஒரு கருப்பினப்பெண் காதலியாக இருந்தாள். என் இல்லற வட்டத்துக்கு வெளியே ஏற்பட்ட காதல் விவகாரம் இது. அந்தக் கருப்பினப் பெண் முழுமையான ஜெர்மன் குடிமகள் இல்லை என்று காரணம் காட்டி, அவளை பிரான்ஸூக்கு அனுப்பிவிட்டனர்.  என் செல்வாக்கை பயன்படுத்தி அவளைத் தக்க வைக்க முடியவில்லை. நாஜிக்கள் பலர் என் தீவிர ரசிகர்கள். ஆனால், அவர்களின் கோர முகம் இப்போதும் என்னை பயமுறுத்தும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.