நரம்பு மண்டலம் வியப்பான விஷயங்கள்
மூளையின் கட்டமைப்பு பிறக்கும்போதே முழுமையடைந்ததாக இருக்கிறது. வளர்ச்சி மட்டுமே 20 வயது வரை அது மூளை உயிர்மங்களின் அமைப்பைப் பெரிதாக்கவும் அதோடு தொடர்புடைய பொருள்களை இணைப்பதும் தான் இந்த வளர்ச்சி.


மூளையின் கட்டமைப்பு பிறக்கும்போதே முழுமையடைந்ததாக இருக்கிறது. வளர்ச்சி மட்டுமே 20 வயது வரை அது மூளை உயிர்மங்களின் அமைப்பைப் பெரிதாக்கவும் அதோடு தொடர்புடைய பொருள்களை இணைப்பதும் தான் இந்த வளர்ச்சி.
நரம்பு உயிர்மங்கள் (செல்) அழியுமானால் அது நிரந்தரம்; மீண்டும் உற்பத்தி ஆவது இல்லை. நம்மோடு பிறந்த மூளை உயிர்மங்களும் குறையுமேயொழிய அதிகரிப்பதில்லை.
ஒருவனுடைய ஆற்றலுக்கு அவனுடைய மூளையின் அமைப்புக்கும் சம்பந்தமே இல்லை. உதாரணமாக லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி மகா மேதாவி. அவருக்கு பெரும் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மரணமுற்ற பின் அவரது மூளையை ஆராய்ந்தவர்கள் தம் வாழ்நாளின் பெரும்பகுதியை பாதி மூளையுடனேயே அவர் வாழ்ந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.
நரம்பு உயிர்மங்களின் வடிவம் பருமனும் ஒருவருக்கொருவர் பெரும் வித்தியாசப்படும்.
முதுகுத்தண்டிலுள்ள நரம்பு உயிர்மங்களில் சில மூளை உயிர்மங்கள் சிலவற்றை 30 மடங்கு பெரிதாக இருக்கும் .
மூளையில் மத்திய நரம்பு மண்டலத்தில் பயணிக்கும் அதிர்வுகளின் வேகத்திலும் மிக்க வேறுபாடு உண்டு. முத்தமிடும்போது இந்த கிளர்ச்சி வேகம் மணிக்கு 140 மைல் வேகம். இதற்கு நேர்மாறாக விரலில் குண்டூசியினால் குத்தும் போது கிளர்ச்சி வேகம் மணிக்கு 25 மைல்கள்தான். மிக மோசமான வலி பயணிப்பது ரொம்பவும் தாமதம்தான் காயம்பட்டதினால் ஏற்படும் வழியை அந்த இடத்தில் நாம் உணர்வது தாமதமாகத்தான். காரணம் இந்த கிளர்ச்சி வேகம் மணிக்கு 2 மைல் வேகத்தில் பயணிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...