தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிரபுதேவா வெளியிட்ட-பர்ஸ்ட் லுக்

நடன இயக்குநர் ராபர்ட் நகைச்சுவை வேடத்தில் நடித்து வரும் படம் "டிங் டாங்'. இப்படத்தை நடன இயக்குநரும் அவரது சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

News image
Updated On :27 பிப்ரவரி 2022, 1:14 pm

DIN


நடன இயக்குநர் ராபர்ட் நகைச்சுவை வேடத்தில் நடித்து வரும் படம் "டிங் டாங்'. இப்படத்தை நடன இயக்குநரும் அவரது சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணி கதையாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்களும் நான்கு கதாநாயகிகளும் நடிக்கிறார்கள். அவர்களுடன் நடன இயக்குநர் ராபர்ட் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக்கை பிரபுதேவா இன்று வெளியிட்டார். இயக்குநர் ஜே.எம் பேசும்போது....

""நாங்கள் பிரபுதேவாவின் தீவிரமான ரசிகர்கள் மட்டுமல்ல அவரது மாணவர்களும் கூட. எனது இயக்கத்தில் ஏற்கெனவே "ஒண்டிக்கு ஒண்டி' என்ற படம் வெளியாகி உள்ளது . இரண்டாவது படம் "டிங் டாங்'. காலத்தினை முக்கியமான மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபுதேவா வெளியிட்டது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நானும் ராபர்ட்டும் அவரது படங்களில் உதவியாளராகப் பணியாற்றி இருக்கின்றோம். எங்களுக்கு எல்லா வகையிலும் குருவாக அவர் இருக்கிறார் . அப்படிப்பட்டவர் இன்று எங்கள் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருப்பது பெருமையாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி நடைபெறும். இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.