திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சென்னை திரைப்பட விழா - 19

சென்னையில் நடந்த  உலகப்பட விழா ஒரு திருவிழா தான். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக சர்வதேச திரைவிழாக்களை கண்டு களித்த நான் இந்த 19-ஆம் ஆண்டு பட விழாவிலும் கலந்து கொண்டு திரை ஓவியங்களை கண்டு மகிழ்ந்தேன்.

News image
Updated On :23 ஜனவரி 2022, 12:30 am

சென்னையில் நடந்த உலகப்பட விழா ஒரு திருவிழா தான். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக சர்வதேச திரைவிழாக்களை கண்டு களித்த நான் இந்த 19-ஆம் ஆண்டு பட விழாவிலும் கலந்து கொண்டு சிறந்த திரை ஓவியங்களை கண்டு மகிழ்ந்தேன்.

கரோனா -ஓமைக்ரான் பரவலால் பார்வையாளர் இருக்கைகள் பாதியாக குறைக்கப்பட்டாலும் இரண்டு நாள் அடை மழை பெய்தாலும் இதை எல்லாம் கடந்து விழா இனிதே நடந்து முடிந்தது.

துவக்க விழா படமாகத் திரையிடப்பட்ட படம். "த்ரி ப்ளேர்ஸ்' இந்த திரைப்படத்தில் ஒரு நடுக்கதையும் அதை சுற்றி பல கிளைக் கதைகளும் பின்னப்பட்டிருக்கிறது. ஓர் இளம் பெற்றோர்- சிறுமியான தங்களது பெண் குழந்தையை பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முதிய தம்பதிகளின் பராமரிப்பில் விட்டு விட்டு வெளியே சென்று வருவது வழக்கம். ஒரு முறை சிறுமியை வெளியே அழைத்து செல்லும் முதியவர் இரவு நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. சிறுமியின் தந்தை பெரியவரையும் தன் மகளையும் பூங்கா ஒன்றில் கண்டுபிடிக்கிறார். தூக்கத்தில் இருந்து கண் விழித்த முதியவர் தான் வீடு திரும்ப மறந்துவிட்டதாகச் சொல்கிறார். அனைவரும் தங்கள் அடுக்குமாடி கட்டடத்தை அடைகிறார்கள். சிறுமியின் தந்தைக்கு ஒரு சந்தேகம். முதியவர் குழந்தையை ஏதாவது செய்துவிட்டாரா என்று? காவல்துறை விசாரணையில் முதியவர் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிய வருகிறது. ஆனால் அந்த சிறுமியின் தந்தை டீன் ஏஜ் பெண் ஒருவரை நாசம் செய்யும் கேலிக்கூத்தையும் இந்தப்படம்சித்தரிக்கிறது.

அயல்நாட்டுப் படங்கள்

முதல் நாள் திரையிடப்பட்ட "ஏ டாக்ஸி டிரைவர்' என்ற படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. 1980-ஆம் ஆண்டு கொரியாவில் சர்வாதிகார ஆட்சி. ஜனநாயகம் மலர வேண்டும் என்று புரட்சிக்காரர்கள் குரல் எழுப்பி கிளர்ச்சி செய்கிறார்கள். அராஜக அரசு தடி அடியும், துப்பாக்கி சூடு நடத்திக் கலவரக்காரர்களை பலி வாங்குகிறது.

ஜெர்மனியில் இருந்து வரும் பீட்டர் என்ற பத்திரிகையாளர் கொரியாவில் நடக்கும் அராஜகங்களை கேமிராவில் பதிவு செய்து உலக அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். இதற்கு கிம் என்னும் லோக்கல் டாக்ஸி டிரைவர் உதவி செய்கிறார். ஆபத்தான இடங்களுக்கு எல்லாம் பீட்டரை தன் டாக்ஸியில் அழைத்துச் செல்கிறார்.

டாக்ஸி டிரைவரும்-பத்திரிகையாளரும் தங்கள் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல் பணிபுரிவது ஒரு தியாகச் செயலே! 2017-இல் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ஒரு தென் கொரியப் படம்.

"பிரதர்ஸ் கிப்பர்' என்ற துருக்கிப்படம், ஆசிரியர்கள் என்ன கோபம் வந்தாலும்- மாணவர்களுக்கு உடல் நலத்தைப் பாதிக்கும் கடுமையான தண்டனை தரக்கூடாது என்று அறிவுறுத்துகிறது. சிறுவர்கள் வெந்நீரில் குளித்துக் கொண்டிருக்கும் போது குறும்பு செய்ய வெந்நீரை நிறுத்திவிட்டு குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வைக்கிறார் ஆசிரியர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்குகிறது காட்சிகள்.

When the pomegranates howlஎன்ற ஆப்கானிஸ்தான் படம் அங்கு நிலவும் பதட்டமான சூழ்நிலையைச் சித்தரிக்கிறது. தள்ளுவண்டியில் மாதுளம் பழங்களை விற்பனை செய்யும் ஒரு சிறுவன், சினிமா கதாநாயகனாக மாறி சாதனை புரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறான். திடீரென நடக்கும் துப்பாக்கி சூட்டில் மரணமடைகிறான். ஆப்கானிஸ்தானில் ஒரு சாமானியனின் கனவுகளும் சாம்பலாவதைப் படம் சித்தரிக்கிறது.

நிறைவு விழாப் படம் ஸ்ர்ழ்ற்ங்ஷ் என்ற பெல்ஜியம் நாட்டுப் படம் ஸ்டீபனின் அம்மாவும்-அப்பாவும் 80 வயதைக் கடந்தவர்கள். அப்பா நன்றாக இருக்கிறார். அம்மா அரை மயக்க நிலையில் இருக்கிறார். அப்பா எழுத்தாளர். அவரது கையெழுத்து பிரதிகளை மேஜையைச் சுத்தம் செய்கிறேன் என்று அம்மா கசக்கி கழிவறையில் போட்டு தண்ணீர் ஊற்றி விடுகிறாள். அப்பா இந்த சம்பவத்தால் ஸ்தம்பித்து போகிறார். இருவரும் முதுமையின் காரணமாக இறந்து போகும் போது ஸ்டீபன் மனதில் துக்கம் மேலோங்குவதை சொல்லி படம் முடிகிறது.

Tree full of parrots என்ற இயக்குநர் ஜெயராஜ் தந்திருக்கும் படம் ஒரு கவிதை.

மோகன்தாஸ் என்ற ஏழை சிறுவன் மோட்டார் படகோட்டி. தந்தை குடிகாரர். மகனிடமும்- மருமகளிடமும் முரண்பட்ட ஒரு கோபக்கார பார்வையற்ற முதியவர் தன் மகள் வீட்டுக்குச் செல்ல மோகன்தாஸ் படகை விரும்பி பெறுகிறார். அதில் அவரை அமர வைத்து படகை இயக்கி செல்கிறான் சிறுவன். காலணாக்கூட வாங்கி கொள்ளாமல் கிட்டத்தட்ட 4 மணி நேரக்கால அளவை கடந்த பயணம், அங்கே மரம் நிறைய கிளிகள் சத்தம். ஆனால் சிறுவன் எதையும் தொடவில்லை. அந்த விருட்சம் வெட்டப்பட போகிறது என்ற கசப்பான செய்தியை அவன் கேட்டது தான்.

படகோட்டியாக நடிக்கும் சிறுவனை கட்டி அணைத்து முத்தம் கொடுத்துப் பாராட்டலாம்.

திரைப்பட விழாவில் தமிழ்ப்படங்களை பார்த்து ரசிக்கும் பாக்கியமும் கிடைத்தது. "கொடுத்துக் கொண்டே இருக்கிறது இயற்கை. கெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் மனிதர்கள்' என்ற செய்தியை சொல்லும் படம். சுற்றுபுறச்சுழலை மதிக்காமல் மனிதன் பல காரியங்களை செய்கிறான். பூமித் தாயையும் அவமதிக்கிறான். இயற்கையும் மண்மாதாவும் மானுடரைப் பழி வாங்குவார்கள் என்கிறார் இயக்குநர்.

பழைய வாசனையை கொஞ்சம் நுகரலாம் என்று "திக்கற்ற பார்வதி' என்ற படத்திற்கு சென்றேன். மூலக்கதை ராஜாஜி. குடிகுடியைக் கெடுக்கும் என்ற மகத்தான செய்தியை சொல்லும் கதை. வசனம் காரைக்குடி நாராயணன். 1973-இல் வெளிவந்த இந்தப்படம் இன்றும் புது மெருகோடு மின்னுகிறது. ராஜாஜி எழுதிய பாடலும் படத்தில் இடம் பெறுகிறது. மற்றப் பாடல்கள் கண்ணதாசன் எழுதியுள்ளார்.

PARROT NOT IN THE CAGE கிளி கூண்டில் இல்லை என்ற கன்னடப்படமும் அருமை. இயக்கம்-ராமதாஸ் நாயுடு. கிளி ஜோசியர் தம் கிளிக் கூண்டை இழக்கிறார். போலீசில் புகார் செய்ததால் இன்ஸ்பெக்டர் அடிக்கிறார். பறவையைக் கூண்டில் அடைத்து வைத்து இம்சை செய்வது பாவம் சட்டத்திற்கு விரோதம் என்று!

அருள் வாக்கு சொல்லும் நபராக கிளி ஜோதிடர் ஆறுமுகம் அவதாரம் எடுத்ததும் அவரது கஜானா நிரம்பி வழிகிறது. இதற்கு ஐடியா கொடுத்தவர் கிளி ஜோதிடர் ஆறுமுகத்தின் நண்பரான இன்னொரு கிளி ஜோதிடர். அருள்வாக்கு தொழிலில் இருவரும் கூட்டாளிகள்.

FUNERAL என்ற மராத்திப் படம் புதிய செய்தியை சொல்ல வருகிறது. இன்ஷுரன்ஸ் ஏஜெண்டான அந்த இளைஞர் பாலிஸி எடுக்கச் சொல்லி ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தார். ஏஜெண்டிடம் பேசிக்கொண்டிருந்த போதே அந்தப் பெரியவர் திடீரென்று மயங்கி விழுந்து இறந்துவிடுகிறார். அந்த பெரியவரின் மகள் அமெரிக்காவில் இருந்து வருகிறார். மகளிடம் போலீஸ் விசாரணை செய்ததில் பெரியவருக்கு இதய நோய் இருப்பது தெரிய வருகிறது. அவரது மரணம் இயற்கை தான் என தெரிய வருகிறது. போலீஸ் இன்ஷுரன்ஸ் ஏஜெண்டை விடுவிக்கிறது.

"எனக்கு இறுதிச்சடங்குகள் சம்பிரதாயப்படி செய்ய தெரியாது உதவுங்கள்' என்கிறார் இறந்தவரின் மகள். ஏஜெண்ட்டும் அவரது நண்பரும் இறுதி சடங்குகளை செவ்வனே செய்து அடக்கம் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு எண்ணம் உதிக்கிறது. இறுதிச் சடங்குகளை செய்ய ஒரு கம்பெனி ஆரம்பித்து இதையே ஒரு தொழிலாக செய்தால் என்ன? கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். அநாதை சடலங்களை நல்லடக்கம் செய்து பலரது பாராட்டுகளையும் பெறுகிறார்கள்.

இவ்வாறு பல சுவாரஸ்யமான படங்களை பார்த்தது மனநிறைவை தந்தது 19-ஆவது திரைப்பட விழா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.