புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மொபைல் திரையரங்கம்

கரோனா காலத்துக்குப் பின் சினிமா காட்டக்கூடிய தளங்கள் மாறியிருக்கின்றன. ஆனாலும்,  சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை அதன் தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். 

News image
Updated On :17 ஜூலை 2022, 11:13 am

தினமணி

கரோனா காலத்துக்குப் பின் சினிமா காட்டக்கூடிய தளங்கள் மாறியிருக்கின்றன. ஆனாலும், சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை அதன் தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாற்றுத் தளமாக வருகிறது மொபைல் திரையரங்கம். எம்டிஎம் ஆக்டிவ் டிஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மூவி டு மொபைல் என்ற என்கிற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. படத்தின் டிக்கெட்டை அருகாமையில் உள்ள கடைகளில் பெற்று அதை மூவி டு மொபைல் ஆப் மூலம் ஸ்கேன் செய்து படத்தைப் பார்த்து விடலாம். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணனின் வழிகாட்டுதலின் பேரில் இயக்குநர்கள் விஜய் சேகரன், தயானந்தன் பழனி இருவரும் இந்நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.

சினிமா டிக்கெட்டுகளை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் விநியோகம் செய்யும் உரிமையை, ஸ்ரீ ரேணுகா டிஜிட்டல் டிஸ்ட்ரிபியூட்டர் நிறுவனத்தின் தலைவர் கோவிந்தராஜ் எடுத்துள்ளார். மாவட்ட வாரியாக விநியோகஸ்தர்களை நியமித்து கிராமங்கள் வரை மளிகை உள்ளிட்ட பிற கடைகளில் படத்தின் டிக்கெட் கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளது. முதல் படமாக கடந்த 13-ஆம் தேதி யாஷிகா ஆனந்த் நடிப்பில் "பெஸ்ட்டி' படம் இத்தளத்தில் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து படங்கள் இத்தளத்தில் வெளியாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.