கிராம மக்களுக்கு சிறப்பு காட்சி
சாலை பயணங்களை முன் வைத்து படங்கள் வந்திருக்கின்றன. அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.


சாலை பயணங்களை முன் வைத்து படங்கள் வந்திருக்கின்றன. அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை. ஆனால் முதன்முறையாக அந்தக் குறையை போக்கும் விதமாக உருவாகி வரும் படம் "துரிதம்'.
இயக்குநர் ஹெச்.வினோத்தின் உதவியாளர் சீனிவாசன் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது..."" உளுந்தூர்பேட்டையில் தங்கி, அங்கிருந்து சென்னை, மதுரை, கோவை, சேலம் என அனைத்து திசையிலும் தினசரி பயணித்து படப்பிடிப்பு நடத்தினோம். குறிப்பாக வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கும்போதே லைவ்வாக படப்பிடிப்பு நடத்தினோம்.. இதில் ஒரு காட்சியை படமாக்கும்போது சிறிய தவறு நிகழ்ந்தாலும், ரீடேக் எடுப்பதுதான் எங்களுக்கு சவாலான விஷயமாக இருந்தது. காட்சியை படமாக்கிய இடத்திற்கே திரும்பி வருவதற்காக மீண்டும் சில கிலோமீட்டர்கள் பயணித்து சுற்றிவர வேண்டி இருந்தது. அதனால் வழக்கமாக சென்னையில் திரையுலகினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தை அழைத்து சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டுவதற்கு பதிலாக திருநெல்வேலி ஆலங்குளத்தில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் அந்தப்பகுதி மக்களை அழைத்து இந்தப் படத்தை திரையிட்டுக் காட்டினோம். எங்கள் வேலைக்கான அங்கீகாரம், அந்த சராசரி மக்களின் பாராட்டுக்களிலேயே கிடைத்தபோது இன்னும் நம்பிக்கை ஏற்பட்டது. படம் விரைவில் திரைக்கு வருகிறது'' என்றார்
இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...