துருக்கியின் வரலாறு

துருக்கியின் பெரிய நகரமான இஸ்தான்புல்லின் பழைய பெயர் கான்ஸ்டான்டினோபில்.  இங்குள்ள மசூதி உலகப் பிரசித்தி பெற்றது.
துருக்கியின் வரலாறு
Updated on
1 min read


துருக்கியின் பெரிய நகரமான இஸ்தான்புல்லின் பழைய பெயர் கான்ஸ்டான்டினோபில்.  இங்குள்ள மசூதி உலகப் பிரசித்தி பெற்றது. ஒரு காலத்தில் சர்ச்சாக இருந்தது.  சான்டாகிளாஸ் கதை உருவான இடம் துருக்கிதான். இஸ்தான்புல்- ஏழு குன்றுகளில் அமைந்துள்ள நகரம்! 

61 தெருக்கள் கொண்ட கிரான்ட் பஜார் மிகவும் பிரபலம். இங்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. லட்சக்கணக்கில் மக்கள் விஜயம் செய்யும் இடம். மசாலா பஜாரும் உண்டு.

* ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்காத  நாடு. மொத்த ஜனத் தொகையில் 98 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.  வெந்நீர் ஊற்றுகளுக்கு பஞ்சமில்லாத நாடு. பல வகையான சூடுகளில் மக்கள் இறங்கி குளிக்கலாம்.

*துலிப் பூவானது துருக்கியில் இருந்தே ஹாலந்துக்குச் சென்று, அங்கு பிரபலமாகிவிட்டது. 

*"ஈவிஸ்ல் ஐ' - துருக்கியைப் பொறுத்தவரையில் ஓர் அதிர்ஷ்ட சின்னம். அதனை பிராஸ்லெட் செயினில் அணிந்தால், கெட்டவை, தங்களை நெருங்காது என்றும் அதிர்ஷ்டம் தங்களைத் தேடி வரும் என்றும் அந்த நாட்டு மக்களின் நம்பிக்கை.

* ஆலிவ் ஆயில் சோப்பு மிகவும் பிரபலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com