வாழ்க்கைத் துணை யார்?

உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான உங்களுடைய வாழ்க்கைத் துணை யார் ?
வாழ்க்கைத் துணை யார்?
Updated on
1 min read

உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான உங்களுடைய வாழ்க்கைத் துணை யார் ?
அம்மா ?
அப்பா ?
மனைவி ?
மகன் ?
மகள் ?
கணவன் ?
நண்பர்கள் ?
இதில் ஒருவரும் இல்லை...!

உங்கள் உண்மையான வாழ்க்கைத் துணை, உங்கள் உடம்புதான் !

உங்கள் உடம்பு செயல்படுவதை நிறுத்திவிட்டால் உங்களுடன் யாரும் இருக்கப்போவதில்லை...!

பிறப்பிலிருந்து இறப்பு வரை உங்களுடன் இருக்கப் போவது உங்கள் உடம்பு தான்.

உங்கள் உடம்புக்காக நீங்கள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் உடம்பு உங்களைப் பார்த்துக் கொள்ளும்.

நீங்கள் என்ன உண்கிறீர்கள், என்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள்,எந்த அளவுக்கு உடலுக்கு ஓய்வு தருகிறீர்கள்,
மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதையெல்லாம் பொருத்துத்தான் உங்கள் உடம்பு உங்களைப் பாதுகாக்கும்...!

உங்கள் உடம்பு மட்டும்தான் நீங்கள் வாழும் வரைக்கும் நிலையான உங்களுக்குரிய விலாசம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள் !

உங்களைத் தவிர வெளி ஆட்கள் வேறு யாரும் உங்கள் உடம்பிற்கு பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள்...!

மூச்சுப் பயிற்சி- நுரையீரல்களுக்கு...!
தியானப் பயிற்சி - மனதிற்கு...!
யோகாசன பயிற்சி - முழு உடம்பிற்கு...!
நடைப்பயிற்சி - இதயத்திற்கு...!
சிறந்த உணவு - ஜீரண உறுப்புகளுக்கு...!
நல்ல எண்ணங்கள் -  ஆன்மாவிற்கு...!
நற்செயல்கள் - உலகிற்கு...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com