அதிசய ஆசிரியர்!

அர்ப்பணிப்பு உணர்வோடு, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கல்வி சார்ந்த அறிவியலை அரசுப் பள்ளியில் ஓர் ஆசிரியர் கற்பித்து வருகிறார் என்றால் அதிசயம்தானே!
அதிசய ஆசிரியர்!
Updated on
1 min read


அர்ப்பணிப்பு உணர்வோடு, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கல்வி சார்ந்த அறிவியலை அரசுப் பள்ளியில் ஓர் ஆசிரியர் கற்பித்து வருகிறார் என்றால் அதிசயம்தானே!

அவர் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகேயுள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்- கண்ணகி தம்பதியின் மகன் இளவரசன். இவர் வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கணிதத்தில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 -ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில், 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான விருது, மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் "புதுமை கல்வியாளர்' என்ற விருது, "புதிர் நிபுணர்' என்ற சிறப்பு அங்கீகாரம் உள்பட பல விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.

இவரிடம் ஓர் சந்திப்பு:

பள்ளியில் என்னதான் செய்துள்ளீர்கள்...?

நான் பணிபுரியும் அரசுப் பள்ளிக்கென ஒரு இணையதளத்தை வடிவமைத்து, வான் அறிவியல் கருத்துகள், பள்ளிசார் செயல்பாடுகள், கட்டுரைகள், மாணவர்களின் சாதனைகள், பெற்றோர்களுக்கான தகவல்களை, கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன்.

பாடம் சார்ந்த கருத்துகளை மாணவர்களுக்குத் தெரிவிப்பதற்கு இணையதளம், மெய்நிகர் கருவிகள், தொலைநோக்கிகள், செல்லிடப்பேசி, தானே கற்றுக் கொள்ளும் வகையிலமைந்த மென்பொருள்களை வகுப்பறையில் உருவாக்கி உள்ளேன்.

இதற்காக வகுப்பறையில் விரைவுக் குறியீடு (க்யூ.ஆர் கோடு) தாங்கிய அடையாள அட்டைகள், கணிதப் புதிர்கள், மாணவர்கள் ஆர்வத்தை துôண்டும் கார்ட்டுன் உள்ளிட்ட காணொலிக் காட்சிகளைப் பயன்படுத்துகிறேன்.

மாணவர்களுக்கு புரிகின்றதா....?

வெளிநாடுகள் பற்றி அறிந்து கொள்ளவும், பிற நாட்டு பள்ளி மாணவர்களை இணைய வழியில் தொடர்பு கொண்டு உரையாடவும், கலாசாரம், கல்வி, பொருளாதாரம் பற்றி அறிந்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளேன். எனது பள்ளி மாணவர்கள் 22 நாட்டு மாணவர்களுடன் தொடர்பு கொண்டுள்ள சிறப்பைப் பெற்றுள்ளனர். எனது வகுப்பு மாணவர்கள், இருமுறை தேசிய அளவிலான செயல்திட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்காக வேறு என்ன செய்துள்ளீர்கள்...?

செல்லிடப்பேசி, கணினி விளையாட்டுகளுக்கு மாணவர்கள் அடிமையாவதைத் தவிர்க்க, மைக்ரோôசாப்ட் கல்வி மென்பொருளைப் பயன்படுத்தி, பாடப் பொருளையே மாணவர்களுக்கு பிடித்த விளையாட்டாக மாற்றி கற்பித்து வருகிறேன்.

போட்டித்தேர்வு வகுப்புகள், நினைவாற்றல், விண்வெளி அறிவு, காணொலி விளையாட்டு மன்றங்களை ஏற்படுத்தி பயிற்சி அளித்து வருகிறேன்.

ஆசிரியர்களுக்காக....?

தகவல் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, 9500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, நவீன தொழில்நுட்ப கற்பித்தல் முறை குறித்து இணைய வழியில் இலவச பயிற்சி அளித்துள்ளேன். இதற்கென "அமேஸிங் டீச்சர்ஸ் போரம்' என்ற இலவச பயிற்சி குழுவை ஒவ்வொரு ஞாயிறன்றும் நடத்தி வருகிறேன்.

புதுமையான முயற்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் முழுமையாக ஆதரவு அளிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com