பணக்கார மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் பணக்கார மாவட்டங்களில் முதலிடம் வகிப்பது கன்னியாகுமரி மாவட்டம்தான்.


தமிழ்நாட்டில் பணக்கார மாவட்டங்களில் முதலிடம் வகிப்பது கன்னியாகுமரி மாவட்டம்தான்.
கன்னியாகுமரி: இந்த மாவட்டத்தில் வாழும் மக்கள்தான் அதிகம் வசதியாக வாழ்கின்றனர். அரசுப் பணிகளில் அதிகம் பேர் இருப்பதும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
இந்த மாவட்ட மக்கள் கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பணிகளிலும் பணிபுரிகின்றனர். வெளிநாட்டில் அதிகம் பேர் பணிபுரிவதும் இந்த மாவட்ட மக்கள்தான்.
ரப்பர் ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பதுடன் மீன்வளம், விவசாயம், சுற்றுலா என எல்லாவற்றிலும் கன்னியாகுமரி மாவட்டம்தான் முன்னிலையில் இருக்கிறது.
கன்னியாகுமரியில் தனிநபர் வருமானம் ரூ.81 ஆயிரத்து 94.
திருப்பூர்: இரண்டாம் இடத்தில் இருக்கிறது. "டாலர் நகரம்' என்று பிரபலமாக அழைக்கப்படும் திருப்பூர், இந்தியாவின் பின்னலாடை தொழில் மையமாக உள்ளது.
இந்தியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐந்து லட்சம் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.
40 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நகரமாக இருந்த திருப்பூர், இப்போது மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய பணக்கார மாவட்டமாகிவிட்டது. திருப்பூரில் தனிநபர் வருமானம் ரூ.72,479.
திருவள்ளூர்: இதன் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம், அதைச் சார்ந்த செயல்பாடுகளை நம்பியே இருக்கிறது. இந்த மாவட்டத்தின் மொத்த தொழிலாளர்களில் 45 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்தே இருக்கின்றனர்.
ஆவடி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்களிலும் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதுவே மூன்றாவது பணக்கார மாவட்டமாக மாற்றியுள்ளது.
இந்த மாவட்டடத்தின் தனிநபர் வருமானம் ரூ.70 ஆயிரத்து 778.
விருதுநகர்: நான்காவது பணக்கார மாவட்டமான விருதுநகரில் தனிநபர் வருமானம் ரூ.70 ஆயிரத்து 689. ஆயில், காபி, தானியங்கள், மிளகாய் உற்பத்தி இங்கு அதிகம். ஸ்பின்னிங் மில்கள், கைத்தறி ஆலைகள் அதிகமிருப்பதால் இந்த இடத்தைப் பிடித்துள்ளது.
காஞ்சிபுரம்: ஐந்தாவது பணக்கார மாவட்டமாக, காஞ்சிபுரம் திகழ்கிறது. கோயில் நகரமான இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதுவே வணிகத் தலமாக மாறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. விவசாயம், பட்டுத் தொழில்கள் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுலாத் துறையும் இங்கு அபரித வளர்ச்சி. காஞ்சிபுரத்தில் தனிநபர் வருமானம் ரூ.70 ஆயிரத்து 667.
இதற்கு அடுத்தபடியாக, உள்ள மாவட்டங்களில் தனிநபர் வருமானம்.
கோவை- ரூ.65 ஆயிரத்து 781.
திருச்சி- ரூ.65 ஆயிரத்து 11.
தூத்துக்குடி- ரூ.61 ஆயிரத்து 467.
ஈரோடு- ரூ.61 ஆயிரத்து 631.
கரூர்- ரூ.61 ஆயிரத்து 181.
நாமக்கல்- ரூ.58 ஆயிரத்து 133.
சென்னை- ரூ.57 ஆயிரத்து 706.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...