தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கிரிக்கெட்டை மையப்படுத்திய கதை

அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2023, 12:30 am

DIN

அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இப்படத்துக்கு இன்னும்பெயரிடப்படாத நிலையில் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. லெமன் லீப் கிரியேஷன்ஸ்மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

தமிழழகன் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப் போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல் என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர். லெமலீப் கிரியேஷன்ஸ் சார்பில் கணேசமூர்த்தி, செளந்தர்யா கணேசமூர்த்தி. நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்த படத்தை தயாரிக்கின்றனர். திரைக்கதை மற்றும் வசனப் பொறுப்பு தமிழ் பிரபா மற்றும் ஜெய்குமார் இருவரும் ஏற்றுள்ளனர். கலை இயக்குநராக ரகு பணியாற்றுகிறார். படத்தொகுப்பு பணியை செல்வா ஆர்.கே கவனிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.