ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமாக "ஹாப்ஷூட்ஸ்' என அழைக்கப்படும் தாவரத்துக்கு டிமாண்ட். உலகின் மிக விலையுயர்ந்த காய்கறி இதுதான்.
இந்தக் காய் அதன் மருத்துவக் குணங்களுக்காகவே மிகவும் பிரபலமானது. ஒரு கிலோ ஹாப் ஷூட்ஸின் விலை தற்போது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.85 ஆயிரம்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இது பிரபலமாக இருந்தாலும், இதன் பூர்வீகம் இந்தியாதான். முதன்முதலில் ஹிமாச்சலப் பிரதேசத்தில்தான் இந்தக் காய் பயிரிடப்பட்டது. ஹியூமுலஸ் லுபுலஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஒரு கொடி தாவரம். இந்தத் தாவரம் ஆறு மீட்டர் உயரம் வரை வளர்ந்து 20 ஆண்டுகள் வாழ்கின்றன. ஆரம்பத்தில் இதை களை தாவரம் என்று நினைத்தனர். பின்னரே இதன் பயன்பாட்டை உணர்ந்து வளர்க்கத் தொடங்கினர்.
இதன் விலைக்கான காரணம்தான் நம்மை இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஹாப்ஷூட்ஸின் விலை அவற்றின் தரத்தைப் பொருத்து மாறுபடும். உயர்ந்த விலை கொண்ட காய்கறி என்பதோடு இவை சந்தையில் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.
கார்டியன் ஊடக அறிக்கையின்படி, ஹாப்ஷூட்ஸ் அறுவடைக்கு தயாராக மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் செடியை கைகளால் மட்டுமே அறுவடை செய்ய முடியும். இச்செடியின் சிறிய பச்சை நுனிகளைப் பறித்து அறுவடை செய்ய அதிக மனித உழைப்பும் கவனிப்பும் தேவைப்படுகிறது. எனவே இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது. இதன் விளைவாக இந்தக் காய் இவ்வளவு விலை அதிகமாக உள்ளது.
இந்தக் காய்கறி, காச நோய்க்கு எதிரான ஆன்டிபாயாட்டிக்களை உருவாக்குவதோடு, கவலை, தூக்கமின்மை, அமைதியின்மை, பதற்றம், உற்சாகம், கவனக்குறைவு-அதிக செயல்பாட்டுக் கோளாறு (அஈஏஈ) உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் மருத்துவக் குணங்களை கொண்டது.
இமயமலையில் பயிரிடப்படும் இதேபோன்ற விலை உயர்ந்த காய்கறியான குச்சி, இமயமலை அடிவாரத்தில் விளையும் காட்டுக் காளான் ஆகியன கிலோ ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


