புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

துல்கர் சல்மானின் "கிங் ஆஃப் கோதா'  

ஜீ ஸ்டுடியோ மற்றும் வே ப்ரேர் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கிங் ஆஃப் கோதா'. ரசிகர்களை ஈர்க்கும் வகையில்,  ஒரு கமர்ஷியல் படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும்  இப்படம் கொண்டுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2023, 6:30 pm

ஜீ ஸ்டுடியோ மற்றும் வே ப்ரேர் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கிங் ஆஃப் கோதா'. ரசிகர்களை ஈர்க்கும் வகையில்,  ஒரு கமர்ஷியல் படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும்  இப்படம் கொண்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு  தகவலுக்காகவும், ரசிகர்கள் ஏங்கி வரும் வேளையில்,  இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த அதிரடியான அறிமுக விடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விடியோ, படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களை சுவாரஸ்யமான ஸ்கெட்ச் வடிவில் அறிமுகப்படுத்துகிறது.

அதிலும் துல்கர் சல்மானை "ராஜாவாக' சித்தரித்திருப்பது,  ரசிகர்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கும் வகையில், அசத்தலாக அமைந்துள்ளது. இப்படத்தில் துல்கர் சல்மான், டான்சிங் ரோஸ் சபிர், பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, வட சென்னை சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். 

துல்கர் சல்மானுக்கு உள்ள மிகப்பெரும் வரவேற்பையும், ஓணம் பண்டிகையின் விடுமுறை காலத்தையும்,  பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இப்படத்தை வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு  நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார், ஷான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். எதிர்பார்ப்புமிக்க இப்படத்தின் அதிரடியான  டீஸர், கடந்த  ஜூன் 28 ஆம் தேதி வெளியானது. டீஸருக்கு தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. தனித்துவமான கதையுடன், மிரட்டலான உருவாக்கத்தில், ரசிகர்களை மகிழ்விக்கும் புதுமையான படைப்பாக மிகப்பெரும் பொருட்செலவில் இந்த படம் உருவெடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.