
பி. கே. எஸ். புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'விவசாயி எனும் நான்- . பூவரசன், புகழேந்தி, அக்ஷிதா, புவனா, 'பருத்தி வீரன்- சரவணன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ராம்நாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். பாடல் மற்றும் வசனங்களை கி.வே.ராமன் எழுதுகிறார். கதை எழுதி இயக்குவதோடு படத்தை தயாரிக்கிறார் பச்சமுத்து. படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... '' இலக்குகளுடன் இந்த பெரு நகரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கோ நின்று ஊரை, மனிதர்களை, காதலை, நட்பை நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு கணத்து ஞாபகங்கள் முளை விடுகின்றன. அப்படி எனக்குள் உருவான ஒரு அம்சம்தான் இதன் கரு. விவசாயம்தான் பேசு பொருள். இன்றைக்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் சுற்றிக் கொண்டிருப்பவர்களில் முக்காவசி பேர் விவசாயிகளின் பிள்ளைகள்தான்.
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டப் பிள்ளைகளுக்கு விவசாயம்தான் ஆதாரம். யானைக் கட்டி போர் அடித்த மண். நீர், காற்று என எல்லாமே கொடுத்து வைத்த பூமி. உலக மயமாக்கலின் சுவடுகள் வந்தேறிய பின்பும், விவசாயத்தின் எச்சங்களை இன்னும் அப்படியே அடைக் காத்து வைத்திருக்கும் மண். இதுதான் களம். அன்பு, காதல், பரிவு... கதையை நகர்த்தும் கரு.விவசாய நிலம் என்பது கதையின் நெகிழ்வான பின்னணிதான். மனித உறவுகளும் முதன்மையானது. விவசாயத்தின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் உணவை சார்ந்து இருக்கிறது .
உணவு விவசாயத்தையும் , விவசாயியையும் சார்ந்து இருக்கிறது. விவாசாயம் நீரை சார்ந்துள்ளது . கடலை திருடி, மலையை திருடி இப்போது மண்ணை திருடும் காலத்திற்கு வந்திருக்கிறது காலம் இதுதான் ஒன் லைன். விவசாய வாழ்வின் அன்பையும் , வியர்வையையும் ஏமாற்றத்தையும், கண்ணீரையும், கோபத்தையும் நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் சொல்லுவதே கதை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.