உடல்நிலை; சிரஞ்சீவி விளக்கம்
சமீபமாக சினிமாக்களில் மட்டுமே அதீத கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. கொரட்டாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த படம் ஆச்சார்யா.


சமீபமாக சினிமாக்களில் மட்டுமே அதீத கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. கொரட்டாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த படம் ஆச்சார்யா. காஜல் அகர்வால், ராம் சரண் மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் மிகப் பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்திலையில் சிரஞ்சீவியின் உடல்நிலை குறித்து அண்மையில் வெளியான செய்திகள் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. இணையத்தில் அவர் உடல் நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வைரலானது. இப்போது அது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் சிரஞ்சீவி.
சில நாள்களுக்கு முன்பாக புற்றுநோய் சிகிச்சை மையம் ஒன்றின் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டு அவர் பேசிய கருத்துகளை முன்னிறுத்தி, சிரஞ்சீவி புற்றுநோயால் பாதிக்கப்படிருப்பதாகவும், தற்போது அவர் குணமடைந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளம் வாயிலாகவே அதற்கு மறுப்பு தெரிவித்த சிரஞ்சீவி, தாம் பெருங்குடல் பரிசோதனை (கொலானஸ்கோப்பி) மேற்கொண்டு புற்றுநோய் அல்லாத திசுக் கட்டியை (நான் கேன்சரஸ் பாலிப்ஸ் ) கண்டறிந்து அகற்றியதாகக் கூறியிருந்தார். ஒரு வேளை உரிய நேரத்தில் அதனை கவனிக்கத் தவறியிருந்தால் அந்தக் கட்டி புற்றுநோயாக உருவெடுத்திருக்கும் என்று நிகழ்ச்சியில் பேசியதை தவறாக ஊடகங்கள் சித்தரித்து விட்டதாகவும் சிரஞ்சீவி ஆதங்கப்பட்டுள்ளார். அவரின் இந்த விளக்கம் அவரது ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...