உயர் ரத்த அழுத்தத்துக்கு ஏற்ற உணவுகள்...

உயர்ரத்த அழுத்த நோய் இன்று மனிதர்களில் பரவலாகக் காணப்படும் நோய்களில் ஒன்றாகிவிட்டது. இந்த நோயைத் தவிர்க்கவும்  குறைக்கவும் உதவும் இயற்கை உணவுகளை அறிவோம்.
உயர் ரத்த அழுத்தத்துக்கு ஏற்ற உணவுகள்...
Updated on
2 min read

உயர்ரத்த அழுத்த நோய் இன்று மனிதர்களில் பரவலாகக் காணப்படும் நோய்களில் ஒன்றாகிவிட்டது. இந்த நோயைத் தவிர்க்கவும்  குறைக்கவும் உதவும் இயற்கை உணவுகளை அறிவோம்.

உலர்ந்த ஆப்ரிகாட் உலர்ந்த ஆப்ரிகாட் அனைத்துக் காலங்களிலும் கிடைக்கக் கூடிய ஒரு சுவையான,  ஆரோக்கியமான உணவுப் பொருள். இதை சாப்பிட்டால், ரத்த அழுத்தம் குறைவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும், கண் ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம் மேம்படும்.

இளநீர்

ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவக் கூடியது. இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கச் செய்யும், உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை வழங்கும். முக்கியமாக, நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

தர்பூசணி

ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்துக்கும் நன்மை விளைவிக்கக் கூடியது. இதில் உள்ள அதிக அளவிலான பொட்டாசியமானது ரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு என இரண்டிலுமே பொட்டாசியம் நல்ல அளவில் உள்ளது.  இவற்றை அன்றாட உணவில் மிதமான அளவில் பலவாறு சேர்த்து வந்தால், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துகொள்ளலாம்.

மாதுளை

மாதுளையில் பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளன.  இதில்,  நார்ச் சத்து, புரோட்டீன், வைட்டமின் சி,  வைட்டமின் கே , ஃபோலேட் சத்துகளும் உள்ளன.  அழற்சி எதிர்ப்புப் பண்புகளும் நிறைந்துள்ளன. 

ஆரஞ்சு ஜூஸ்

வைட்டமின் சி, பொட்டாசியம் சத்துகள் உள்ளன.  எனவே உயர் ரத்த அழுத்த பிரச்னை இருந்தால், காலை உணவின்போது,  ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.

வாழைப்பழம்

பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளதால்,  தினமும் வாழைப்பழத்தை ஒருவர் சாப்பிட்டு வந்தால்,  ரத்த அழுத்த பிரச்னையைத் தவிர்க்கலாம்.

பூண்டு

பூண்டுகளில் ஆன்டி-ஹைப்பர்டென்சிவ் பண்புகள் உள்ளன. இதில் உள்ள அல்லிசின் என்னும் சல்பர் பொருள்தான் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. 

பசலைக்கீரை

நீர், நார்ச்சத்துகளும், வைட்டமின் ஏ, சி, கே போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் நிறைந்துள்ளன. ஃபோலிக் அமிலம், இரும்புச் சத்து, கால்சியம் போன்றவையும் உள்ளன. ஒரு கிண்ணம் பசலைக்கீரை நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்து, எடை இழப்புக்கு உதவுகிறது.

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி ரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து,  ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.  இதயத் துடிப்புகளை வலிமைப்படுத்தி,  அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.

முருங்கைக்காய்

முருங்கை இலைச் சாற்றால், இதயம் விரியும்போது,  சுருங்கும்போது ஏற்படும் ரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு.  இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.

நெல்லிக்காய்

வைட்டமின் சி ரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகித்து, ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.  

ஆளி விதை

ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது.    ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொழுப்புச் சத்து குறைந்த அளவிலேயே இருக்கும்.  ரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com