சாதனை மேல் சாதனை..!

கால்பந்தாட்ட உலகில் இந்திய வீரர்கள் எவருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் இந்திய தேசிய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு கிடைத்துள்ளது.
சாதனை மேல் சாதனை..!
Updated on
1 min read


கால்பந்தாட்ட உலகில் இந்திய வீரர்கள் எவருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் இந்திய தேசிய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு கிடைத்துள்ளது. சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கு பெறும் வீரர்களில் அதிக கோல்கள் அடித்து சாதனை புரிந்த முதல் மூன்று வீரர்களை சர்வதேச கால்பந்தாட்ட சங்கமான ஃபிஃபா அண்மையில் கௌரவித்தது.

போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 123 கோல்களுடனும், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 104 கோல்களுடனும் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்திய அணியின் சுனில் சேத்ரி, 92 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். மூவரும் கேப்டன்களாக இருப்பதால், அவர்களை பெருமைப் படுத்திய நிகழ்ச்சிக்கு "கேப்டன் ஃபென்டாஸ்டிக்" என்று "ஃபிஃபா' பெயர் சூட்டியது.

இந்த நிகழ்ச்சியில் சுனில் சேத்ரி, ஃபிபா நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளார். சுனில் குறித்த செய்திப்படம் ஒன்றையும் தயாரித்து ஃபிபா வெளியிட்டுள்ளது.

செகந்திராபாத்தைச் சேர்ந்த சுனில் சேத்ரிக்கு முப்பத்து ஒன்பது வயதாகிறது. தனது 19ஆவது வயதில் ஆடத் தொடங்கிய சுனில், இந்தியாவின் அனைத்து கால் பந்தாட்ட கிளப்களின் சார்பில் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். இவரது மனைவி சோனம் பட்டாச்சார்யா தொழில் முனைவோர். ஃபிபா நிகழ்ச்சிக்கு முன் சுனிலுக்குப் பரிசாக மகனை பெற்றுத்தந்துள்ளார் சோனம்.

இந்திய அணிக்காக 142 ஆட்டங்களில் விளையாடி 92 கோல்களை அடித்திருக்கும் சுனில் 10 ஆண்டுகளாக இந்திய கால்பந்து அணித் தலைவராகச் செயல்படுகிறார். "அதிக கோல் அடித்த இந்திய கால்பந்து வீரர்' , மூன்று கண்டங்களில் கால்பந்தாட்டங்களில் பங்கேற்று ஆடிய ஒரே இந்திய வீரர். அதிக
அளவில் இந்தியாவின் சார்பாக கால்பந்து ஆடிய இந்திய வீரர், அதிக அளவில் ஹாட்ரிக் கோல் அடித்த இந்திய வீரர் உள்ளிட்ட பெருமைகளுக்கும் சுனில் சொந்தக்காரர். அர்ஜுனா, பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருதுகளை ஒருசேர பெற்றிருக்கும் ஒரே கால்பந்து சாதனையாளரும் சுனில் செத்ரிதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com