கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பயணங்களில்...!

இந்திய நாட்டுக்குள் இந்தியர்கள் விமானத்தில் பயணிக்க பாஸ்போர்ட் தேவையில்லை.  

News image
Updated On :7 அக்டோபர் 2023, 6:30 pm

இந்திய நாட்டுக்குள் இந்தியர்கள் விமானத்தில் பயணிக்க பாஸ்போர்ட் தேவையில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றால் பாஸ்போர்ட்டும் விசாவும் அவசியம். இவை இரண்டும் இல்லாமல், பூடான், நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்குச் செல்ல முடியும்.

பூடானுக்குச் செல்ல வாக்காளர் அடையாள அட்டைகளில் ஒன்றை ஆவணமாகக் கொண்டு, விமான டிக்கெட் எடுத்துகொண்டு விமானத்தில் பயணிக்கலாம். அதேநேரத்தில் குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் அல்லது கல்வி நிறுவனங்களின் அடையாள அட்டையே போதுமானது.

நேபாளத்துக்குச் செல்ல இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கும் சான்று ஆவணங்கள் மட்டுமே தேவை. இதற்கு ஆதார் அட்டையோ, வாக்காளர் அடையாள அட்டையை காட்டினால் போதும்.

ஆம்னி பேருந்துகளில் பயணிக்கிறோம். அதற்கு எப்படி பெயர் வந்தது தெரியுமா? "ஆம்னஸ்' எனும் பிரெஞ்சு வார்த்தையிலிருந்து உருவானதுதான் ஆம்னி பஸ். அந்த காலத்தில் மக்கள் அமரும் பெரிய பெட்டி போன்ற பகுதியை குதிரைகள் இழுத்துச் செல்லும். அதை "ஆம்னஸ்' என்று அழைத்திருக்கின்றனர். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கான பேருந்து ஒன்றில் 1843ஆம் ஆண்டில் பிரான்ஸில் விடப்பட்டது. இது பொதுவான பஸ் என்பதால், "ஆம்னி பஸ்' என்று பெயரிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.