கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

விஷப்பூச்சி கடிக்கு வேப்பிலை!

ஒருமுறை எஸ்.எஸ்.ராஜேந்திரன்  நடித்த படத்தின் படப்பிடிப்புக்காக, வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட குடியாத்தத்துக்கு படக் குழுவினர் கார், வேன்களில் சென்றுகொண்டிருந்தனர்.  

News image
Updated On :28 அக்டோபர் 2023, 6:30 pm

ஒருமுறை எஸ்.எஸ்.ராஜேந்திரன்  நடித்த படத்தின் படப்பிடிப்புக்காக, வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட குடியாத்தத்துக்கு படக் குழுவினர் கார், வேன்களில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, என்.எஸ்.கிருஷ்ணனின் உடல், முகம் வீங்கி செய்வதறியாது உடன் வந்தோர் திகைத்தனர்.  அப்போது அந்த வழியே வந்த வேட்டியும், மேல் துண்டும் மட்டுமே அணிந்து வந்த மூத்த விவசாயி ஒருவர் நிலைமையைப் புரிந்துகொண்டார்.
பின்னர் அந்த விவசாயி, 'யாரும் பயப்படாதீங்க?  ஏதோ விஷப்பூச்சி கடிச்சிருக்கு. கொஞ்சம் பொறுங்க?'' எனக் கூறி,  அருகில் இருந்த வேப்ப மரக் கிளையின் இலைகளை உருவி வந்தார். கொஞ்சம், கொஞ்சமாக மென்று விழுங்கும்படி, என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கொடுத்தார். அவரும் மென்று விழுங்கிக் கொண்டே இருந்தார். 'என்ன ஆச்சரியம். வேப்பிலை எனக்கு கசக்கவில்லை'' என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்.
'கசக்கிற வரை சாப்பிட்டுக் கொண்டே இருங்கள்'' என வேப்பிலையை கொடுத்துகொண்டே இருந்தார் அந்தப் பெரியவர். 
வீக்கம் லேசாகக் குறைய தொடங்கியது.
'இப்போதுதான் கொஞ்சம் கசக்கிற மாதிரி இருக்கு. வீக்கமும் குறைந்துவிட்டது'' என்ற என்.எஸ்.கிருஷ்ணன் சிறிதுநேரம் கழித்து, 'இப்போது நல்லாவே கசக்குது. மறுபடியும் என்னை பழைய என்.எஸ்.கிருஷ்ணனாக மாற்றிவிட்டீங்கள்'' என்று சொல்லி சிரித்தவாறே ஆயிரம் ரூபாயை விவசாயிக்கு கொடுத்தார்.
'எனக்கா ஆயிரம் ரூபாய். ஒரு வீடே கட்டி விடுவேனே?'' என்றார் விவசாயி.
'கட்டுங்கோ..  கட்டுங்கோ.. பணம் போதாவிட்டால் சென்னையில் வந்து என்னைப் பாருங்கோ?'' என்று என்.எஸ்.கிருஷ்ணன் கூறினார்.
பின்னர், திட்டமிட்டபடி படக் குழுவினர் குடியாத்தத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னைக்குத் திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.