ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சரவணன் தயாரித்து வரும் படம் "பித்தல மாத்தி'. இப்படத்தின் கதாநாயகனாக உமாபதி இராமையா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சம்ஸ்கிருதி நடிக்கிறார். கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு "பித்தல மாத்தி' என பெயரிடப்பட்டிருக்கிறது. பால சரவணன், வினுதாலால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், "ஆடுகளம்' நரேன், "காதல்' சுகுமார் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார். மோசஸ் இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஏ. எல். ரமேஷ் கவனிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை மாணிக்க வித்யா இயக்குகிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின்இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
அக்டோபர் மாதம் படம் திரைக்கு வரவுள்ளது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது... "" பித்தல மாத்தி என்றால் கேடித்தனம்.. தகிடு தத்தம்.. செய்பவர்களை குறிக்கும். மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாமும் இருந்துக் கொண்டே இருக்கிறது. கொஞ்ச சதவீதம் கூடிக் குறைந்து இருந்தால் நாமே நல்லவன், கெட்டவன் என்று பிரித்து சொல்லி விடுகிறோம். கெட்டவனாக இருந்தவனை நல்லவனாக ஆக்குவதற்கான முயற்சியும், அவனை வேறு திசைக்கு கொண்டு போகிற முயற்சியும் நடக்கிறது.
கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்? என்பதே கதை'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


