தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இறுதி முயற்சி

வரம் சினிமாஸ் தயாரிப்பில் நடிகர் ரஞ்சித், மெகாலி மீனாட்சி விட்டல் ராவ் நடித்துள்ள 'இறுதி முயற்சி' படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2024, 6:30 pm

DIN

வரம் சினிமாஸ் தயாரிப்பில் நடிகர் ரஞ்சித், மெகாலி மீனாட்சி விட்டல் ராவ் நடித்துள்ள 'இறுதி முயற்சி' படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது. இப்படத்தை வெங்கட் ஜனா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றதைக் கொண்டாட படக்குழுவினர் மனநலம் குன்றிய சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று அங்கு படிக்கும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களை சந்தோஷப்படுத்தி அந்த மனநலம் குன்றிய சிறுவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்று வந்தனர்.

சாதாரண பெட்டிக் கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்னையை சொல்லும் விதமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நெஞ்சத்தை பதை பதைக்க வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இப்படம் உருவாகியுள்ளது.

ரஞ்சித், மெகாலி மீனாட்சி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் இன்னும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். படத்தொகுப்பு - வடிவேல் விமல் ராஜ், ஒளிப்பதிவு - சூர்யா காந்தி, இசை - சுனில் லாசர், கலை - பாபு பிரபாகர், பாடலாசிரியர் - மஷீக் ரஹ்மான். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், இறுதி கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வர, விரைவில் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.