கிரிக்கெட்டை மையமாக கொண்ட புளூ ஸ்டார்

லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "புளூ ஸ்டார்'.
கிரிக்கெட்டை மையமாக கொண்ட புளூ ஸ்டார்
Published on
Updated on
1 min read

லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "புளூ ஸ்டார்'. அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதி பெருமாள், அருண் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி  ஜெய்குமார் இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது....'' 

அரசியல், சினிமா, விளையாட்டு இந்த மூன்று துறைகளும்தான் இந்தியாவை எப்போதும் ரூல் செய்கிறது. அதுவும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் மவுசு உலகறிந்த விஷயம். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும், பிடித்தமான விளையாட்டாகவும் மாறியிருக்கிறது. குக்கிராமங்கள் தொடங்கி பெரு நகரம் வரைக்கும் இந்த விளையாட்டுக்கான ரசிகர்கள் என்பது பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.  இளைஞர்கள் மட்டுமில்லாமல் பெண்கள் மத்தியிலும் இது இப்போது வெகு பிரபலமாகியுள்ளது.

அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் விளையாட்டு, காதல், நட்பு, அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான இது உருவாகியுள்ளது. அசோக் செல்வன்,  சாந்தனு பாக்யராஜ், பிரித்வி பாண்டியராஜன் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே நன்றாக கிரிக்கெட் விளையாடக் கூடியவர்களாக இருந்தது படத்துக்கு பெரும் பலம். இந்தப்படம் இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இப்போது விளையாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள், என அனைவருக்கும் இந்தப்படம் நெருக்கமான உணர்வைத் தரக்கூடியபடமாக இருக்கும். இந்தப்படத்திற்காக முழுக்க அரக்கோணம் ஊர் பசங்களாகவே நடிகர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது, கோவிந்த் வசந்தா பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் படத்துக்குப் பலம். வரும் 25-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது'' என்றார் இயக்குநர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com