உடல் தான விழிப்புணர்வில்...

தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பது பழமொழி.  ஆனால்,  'வாழும் வரை ரத்த தானம்; வாழ்ந்த பின்னர் உடல் தானமும்,  உடல் உறுப்புகள் தானமும்..'
உடல் தான விழிப்புணர்வில்...
Published on
Updated on
1 min read

தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பது பழமொழி. ஆனால், 'வாழும் வரை ரத்த தானம்; வாழ்ந்த பின்னர் உடல் தானமும், உடல் உறுப்புகள் தானமும்..' என்பது புதுமொழி'' என்கிறார் சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி அருகேயுள்ள சிங்கிபுரம் குட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சரவணன்.

இவர் தனது இளம் வயதிலேயே உடல் தானம் செய்ய உறுதிமொழி கொடுத்ததோடு, பொதுமக்களுக்கு அன்றாடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். சின்னு- சந்திரா தம்பதியின் மகனான சிவராமன், முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டமும், ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றவர்.

1996-ஆம் ஆண்டில் 'விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம்' தொடங்கி, பல்வேறு நலப் பணிகளைச் செய்தார்.

கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாலை நேர வகுப்புகளை நடத்தியதோடு, போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து பலர் அரசுப் பணி பெற வழிவகை செய்தார்.

2014 -ஆம் ஆண்டு அப்போதைய சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகனிடம், தனது இறப்புக்குப் பிறகு உடலை தானம் செய்யதாக உறுதிமொழி பத்திரத்தை சரவணன் அளித்தார். பின்னர், கடந்த 10 ஆண்டுகளாகத் தன்னைச் சந்திப்போரிடம் உடல் தானத்தின் முக்கியத்துவம் குறித்தும், இறந்த பிறகும் இவ்வுலகத்தில் தொடர்ந்து வாழ உதவும் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வர வேண்டும் என விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து அவரிடம் பேசியபோது:

'அரசுப் பள்ளியில் ஆய்வகப் பணியாளராகப் பணியாற்றி வருகிறேன். 2014- ஆம் ஆண்டு, எனது திருமணத்திற்கு முன்பே, 31 -ஆவது வயதில் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக உறுதிமொழி பத்திரத்தை எழுதிக் கொடுத்தேன். இதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எனக்கு பாராட்டும் தெரிவித்தார்.

நான் அன்றாடம் சந்திப்போரிடம் உடல் தானம் செய்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

வள்ளலாரின் சன்மார்க்க நெறிகளைக் கடைபிடித்து, அசைவ உணவுகளை மறுத்து, அன்னதானத்துக்கு உதவிபுரிந்து வருகிறேன். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com