15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

சர்வதேச விழாக்களில் சாயாவனம்

நாயகன், குணச்சித்திரம், வில்லன் என்று இதுவரை தான் நடித்த பாத்திரங்களில் எல்லாம் முத்திரை பதித்துள்ள செளந்தரராஜா முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள படம் "சாயாவனம்'.

News image
Updated On :28 ஜனவரி 2024, 12:00 am IST


நாயகன், குணச்சித்திரம், வில்லன் என்று இதுவரை தான் நடித்த பாத்திரங்களில் எல்லாம் முத்திரை பதித்துள்ள செளந்தரராஜா முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள படம் "சாயாவனம்'.

இப்படம்  கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் சாயாவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு திரையிடப்பட்டது. அதே போன்று சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் கவனத்தை ஈர்த்தது. மலையாள இயக்குநர் அனில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.  தேவானந்தா, அப்புக்குட்டி,  "கர்ணன்' புகழ் ஜானகி, சந்தோஷ் தாமோதரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இது குறித்து பேசிய செளந்தரராஜா, "முழுக்க முழுக்க மலை, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இதுவரை ஏற்றிராத சவாலான பாத்திரத்தில் நடித்துள்ளேன். பெரும்பாலான காட்சிகள் சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டன. இடைவிடாது மழை பெய்யும் மலைப்பகுதியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் மையக்கரு. மிகுந்த சிரமங்களுக்கு இடையே படப்பிடிப்பு நடைபெற்றது. 

நான் நடித்துள்ள பாத்திரத்திற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டி இருந்தது. சர்வதேச திரைப்பட விழாக்களில் எங்கள் கடின உழைப்பு பாராட்டப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது," என்று கூறினார். அருள்நிதி நடிக்கும் திரைப்படத்திலும் மலையாள திரைப்படம் ஒன்றிலும் செளந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.