தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

'இரு நகரங்களின் கதை' புகழ் சார்லஸ் டிக்கன்ஸ்

ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக மக்கள் மனதில் இடம் பெற்றவர் சார்லஸ் டிக்கன்ஸ்.

News image

சார்லஸ் டிக்கன்ஸ்

Updated On :6 அக்டோபர் 2024, 12:05 pm

டி.எம். இரத்தினவேல்

ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக மக்கள் மனதில் இடம் பெற்றவர் சார்லஸ் டிக்கன்ஸ், உலகப் புகழும் உன்னதமான படைப்புகளுமான 'ஆலிவர் ட்விஸ்ட்', 'பிக்விக் பேப்பர்ஸ்', 'டேவிட் காப்பர் ஃபீல்ட்', 'கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்', கிறிஸ்துமஸ் கரோல்.. என்று இன்றைக்கும் வாழும் இலக்கியங்களை வழங்கியவர் சார்லஸ் டிக்கன்ஸ்.

தன்னுடைய படைப்புகளில் ஏழைகளின் துன்பங்களை வெளிச்சம் போட்டு காட்டியவர். அன்றைய காலத்தில் அநாதை இல்லங்களில் சிறுவர்கள் பட்ட துன்பங்களைப் படம் பிடித்து காட்டினார்.

சராசரி மனிதனும் ரசிக்கும்படி அவர் எளிமையாக எழுதினார். கேலியும் கிண்டலும் அவர் எழுத்துகளில் சுடர்விட்டன. உலக மொழிகள் அனைத்திலும் டிக்கன்ஸின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு நாட்டவர்

களும் டிக்கன்ஸை தங்களது நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொண்டனர்.

இத்தகைய சார்லஸ் டிக்கன்ஸின் இளமைப் பருவத்தை அறிவோம்:

பெரும்பாலான எழுத்தாளர்களைப் போலவே வறுமை குடிகொண்டிருந்தது. பசியாற உணவு கிடையாது. குளிரில் இருந்து ஒதுங்கித் தூங்க வசதியான வீடு கிடையாது. எடுபிடி வேலைகளைச் செய்வார். பாட்டில்களில் லேபிள் ஓட்டுவார். அதில் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு பசியாறுவார். பட்ட கடன்களைத் தீர்க்க முடியாமல் அவரது பெற்றோர் சிறையில் இருந்தனர். இப்படியிருக்க அவர் எவ்வாறு பள்ளிக்குச் செல்ல முடியும்?

நான்கு ஆண்டுகள்தான் பள்ளியில் படித்தார் இந்த உலகம் போற்றும் இலக்கியகர்தா. இவர் இருபத்தொரு படைப்புகளை இலக்கிய உலகுக்கு அளித்திருக்கிறார்.

சார்லஸ் டிக்கன்ஸின் புகழ்பெற்ற நாவல்களில் மிகப் பிரபலமானது 'தி டேல் ஆஃப் டூ சிட்டீஸ்' (இரு நகரங்களின் கதை).

இங்கிலாந்தும் (லண்டன்), பிரான்ஸூம் (பாரீஸ்) அந்த இரு நகரங்கள். அன்றும் இன்றும் என்றும் பிரபலமான நகரங்கள். அவர் தனது காலத்தில் அவ்விரு நகரங்களின் நாகரிகத்தை, அரசியலை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

புகழ்பெற்ற பிரெஞ்சு புரட்சியை நிலைகளனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அற்புத நாவல் இது. சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஒரேயொரு சரித்திர நாவலும் இதுதான்.

நாயகன் சிட்டி கார்ட்டன் ஓர் அற்புதமான படைப்பு. காதலுக்காக, நட்புக்காகத் தன்னையே தியாகம் செய்யும் கதாபாத்திரம். ஒரே மாதிரி தோற்றமுடைய இவர்களைப் பற்றி எத்தனையோ கற்பனைகள் உருவாக்கி இருக்கின்றன. ஆனால், டிக்கன்ஸின் சார்லஸ் டார்னே சிட்னி கார்ட்டன் போல மற்றவை நெஞ்சில் நிலைத்து நிற்கும்படியாக இருக்கவில்லை.

இரு நகரங்களின் கதை என்ன?

1789-இல் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியின் கதைதான் அது.

இங்கிலாந்தும் பிரான்சும் 1775-ஆம் ஆண்டு வரை பலமுள்ள மன்னர்களால் ஆளப்பட்டன. ஆனால், அன்பும் நேர்மையுமாக ஆளப்படவில்லை. எங்கும் மக்கள் பட்டினியால் இறந்துகொண்டிருந்தனர். முடிவில் பிரான்ஸின் குடியானவர்கள் 3 லட்சம் பேர் பொங்கி எழுந்தனர்.

அரசரை அகற்றினார். அவரை கைது செய்தனர். விசாரணை நடத்தினர்.

குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினார்கள். பிறகு சிரச் சேதம் செய்தனர். இதன் பின்னணி என்னவென்றால்- அது பொற்கால மாக இருந்தது;

அது மிக மோசமான காலமாகவும் இருந்தது. அது அறிவாளிகளின் இருப்பிடமாக இருந்தது. அது முட்டாள்களின் பிறப்பிடமாகவு மிருந்தது.

அது ஒளி வீசிய பருவம்;

அது பேரிருள் சூழ்ந்த பருவமும் கூட;

அது நம்பிக்கையின் ஊற்று;

அது சோதனையில் வித்தாக வுமிருந்தது!

இப்படியிருந்த சூழ்நிலையில்தான் இரு நகரங்களின் கதை ஆரம்பமாகிறது. பாரிஸ்- லண்டன் இவ்விரு நகரங்களும் இக்கதையின் நிலைக்களம்.

அப்போது, வாழ்ந்த மக்களில் சிலர் குற்றமற்றவர்கள். பலர் குற்றவாளிகள். 1789-இல் ஒரு மழைக்காலத்தில் பிரெஞ்சு புரட்சி முடிவுக்கு வந்தது. டிக்கன்ஸ் மேலும் ஒரு நூல் எழுதிப் புகழ்ப் பெற்றார். லண்டன் நகரைப் பற்றிய பல குறிப்புகளை நூலாக விளங்கிய 'பாஸின் ஸ்கெட்சஸ்' 1836-இல் வெளிவந்து மக்களிடைய பிரபலமானது.

நாவலாசிரியர் என்ற புகழ் உச்சிக்கு சார்லஸ் டிக்கன்ஸை உயர்த்தியது 'டேவிட் காப்பர் ஃபீல்டு' (1849) என்ற நாவல்தான். இந்த நாவல் சார்லஸ் டிக்கன்ஸின் சுயசரிதமாகக் கருதப்பட்டது. இது ஒரு சிறந்த நாவலுக்கான சகல குணங்களும் பொருந்தியிருந்தது. அதன்பின்னர், சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்களில் எல்லாம் பெரும்பாலும் சமூகப் பிரச்னைகள் இடம் பெற்றன.

இவரது 'ஆலிவர் ட்விஸ்ட்' ஹாஸ்யமும் பரபரப்பும் மிக்க நாவலானாலும் படிப்போரைப் பரிதாபப் படச் செய்தது.

குடிசைப் பகுதிகளும் அநாதை இல்லங்களும் ஆலிவர் ட்விஸ்டும் நிக்கோலஸ் நிக்கல்பி, பள்ளியின் மோசமான நிலை பற்றியும் விவரிக்கின்றன.

எந்த நாவலாசிரியரும் கையாளாத அதை பிரபலமான கற்பனைகளை உருவாக்கினார் சார்லஸ் டிக்கன்ஸ்.

திடீரென்று 1870-இல் இறந்த அவர், கடைசியாக முடிக்காமல் பாதியில் விட்டுச் சென்ற நாவல் 'தி மிஸ்டரி ஆஃப் எட்வின் ட்ரூட்' என்பதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.