கோடையில் வயிறு உப்பிசத்தை குறைக்க...
கோடை காலத்தில், இரவில் சாப்பிடும் உணவு செரிக்காது. வயிற்றில் நமச்சல் ஏற்படும். பலருக்கு வயிறு புஸ்ஸென்று இருக்கும். இதனை சமாளித்து வயிற்றை நல்லபடியாகப் பராமரிக்க இவற்றை பின்பற்றலாம்.
ஊற வைத்த சீரகப் பானத்தைக் குடிப்பதால், உப்பிச வாயுவைப் போக்கலாம். ஜீரணத்துக்கும் வழி செய்யும்.
ஒம வாட்டரை தண்ணீரில் கலந்து குடித்தால் மறுநாள் காலை நமைச்சல் காணாமல் போய் விடும். மலச்சிக்கலையும் அகற்றும்.
பச்சையான உணவுகள் குளிர்ச்சியாக இருக்கும்போது அவற்றை தாமதமாகச் சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கும். வாயு சிக்கல் ஏற்பட்டு வயிறு உப்பிசம் வரவும் வாய்ப்பு உண்டு.
சாம்பார், சப்ஜி போன்றவற்றில் ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடி சேர்க்கவும். குடலுக்கு உகந்த பாக்டீரியாக்கள் நிறைய உற்பத்தியாகி வாயுவை வெளியேற்றுவதுடன் உப்பிசம் ஏற்படுவதையும் தவிர்க்கும்.
தேங்காய் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தி வயிறை மெதுவாக மசாஜ் செய்யவும்.இதுபெருங்குடல், அதன் வெளியே சிக்கியுள்ள பொருட்களை வெளியேற உதவும்.
பப்பாளி, அன்னாசிப் பழங்களில் பப்பேன், ப்ரோனமலைன் உள்ளது. இவை இயற்கையாகவே புரதத்தை உடைத்து ஜீரணத்துக்கு உதவுகிறது.
சுவருக்கு எதிராக படுத்துகொண்டு கால்களை தூக்கி சுவரில் சில நிமிடங்கள் வைத்திருக்கவும்.இந்த ஆசனம் குடலில் உள்ள இடைஞ்சல்களை வெளியேற்ற உதவும்.
வயிற்றில் லேசான சூடுபடுவதால் குடல் தசைகள் தளர்வடைந்து, தசைப் பிடிப்பை குறைத்து சிக்கிய வாயுவை வெளியேற்ற உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.