
இந்தியக் கடற்படையின் முதன்மையான விமானத் தளம் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளியாகும்.
இந்தக் கடற்படை விமானத் தளமானது இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தயார் நிலையிலும் உள்ளது.
ஐ.என்.எஸ். ராஜாளியில் கடற்படை வீரர்கள் மட்டுமல்ல; கடற்படை வீராங்கனைகளும் உள்ளனர். இந்தக் கடற்படை தேசிய கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையைக் காட்டி வருகிறது.
புவிசார் அரசியலில் நிலப்பரப்பு, கடற்பகுதிகளின் பாதுகாப்பில் ஏற்படும் சவால்களைச் சந்திக்கும் நிலையில் இது உள்ளது.