படம் பிடிக்கலைன்னா? பணம் வாபஸ்!

திரையரங்குகளில் படம் பார்க்கச் செல்பவர்கள் படம் பிடிக்கவில்லை என்றால் பாதியில் எழுந்து போய்விடுகின்றனர்.
படம் பிடிக்கலைன்னா? பணம் வாபஸ்!
Picasa
Updated on
1 min read

திரையரங்குகளில் படம் பார்க்கச் செல்பவர்கள் படம் பிடிக்கவில்லை என்றால் பாதியில் எழுந்து போய்விடுகின்றனர். அவ்வாறு செல்பவர்களின் மனதுக்கு ஆறுதல் தரும் விதமாக, ரசிகர்கள் செலுத்திய நுழைவுக் கட்டணத்தில் பாதியைத் திருப்பித் தர பி.வி.ஆர். திரையரங்குகள் குழுமம் முன்வந்துள்ளது.

முக்கால்வாசி படத்தைப் பொறுமையுடன் பார்த்தும் பொறுக்க முடியாமல் வெளியே வருபவருக்கு 30 % கட்டணமும், படம் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் வெளியேறுபவர்களுக்கு 60 % கட்டணம் திருப்பித் தரப்படும்.

இந்தச் சலுகையைப் பெற விரும்புகிறவர்கள், திரையரங்கு நுழைவுச் சீட்டை முன்பதிவு செய்யும்போது அல்லது வாங்கும்போது சிறப்புக் கட்டணமாக 10 % கூடுதலாகச் செலுத்தவேண்டும். இதைப் பெறுபவர்கள் எவ்வளவு நேரம் திரைப்படம் பார்க்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த பிரத்யேக கேமராவால் கண்காணிக்கப்படுவார்கள்.

டிக்கெட் வாங்குபவர்கள் அமரும் இருக்கையும் விசேஷ நுழைவுச் சீட்டுடன் மின்னியல் ரீதியாக இணைக்கப்படும். இதனால் படம் பார்ப்பவர்கள் எவ்வளவு நேரம் இருக்கையில் அமர்ந்திருக்கிறார் என்பதை கணினி தானாகக் கணக்கிட்டுக் கொள்ளும். படம் பிடிக்காமல் திரையரங்கிலிருந்து வெளியேறுபவர், படம் பார்க்க இருக்கையில் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தார் என்று கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு கட்டணம் கணக்கிடப்பட்டு "ஆன்லைன்' வழியாக திரும்ப வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com