திரைக் கதிர்

மறைந்த மூத்த அரசியல் தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் குறித்த ஆவணப்படம் மிக பிரம்மாண்டமாகவும் வரலாற்றில் நாம் கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது.
திரைக் கதிர்
Published on
Updated on
2 min read

மறைந்த மூத்த அரசியல் தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் குறித்த ஆவணப்படம் மிக பிரம்மாண்டமாகவும் வரலாற்றில் நாம் கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது.

தமிழகத்தின் அரசியல் மற்றும் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இருந்த ஆர்.எம்.வி.யின் ஆவணப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில், ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார், எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, சுரேஷ் கிருஷ்ணா போன்ற திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் இதில்பங்கேற்று அவருடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து சிறப்பு செய்துள்ளனர்.

தருமபுரம் ஆதினம், மற்றும் காஞ்சிபுரம் மடத்தைச் சேர்ந்த காஞ்சி பெரியவர் என ஆன்மிகவாதிகளும் ஆவணப்படத்தில் ஆர்.எம். வீரப்பனை போற்றியுள்ளனர்.

இளையராஜா- நாசர் கூட்டணி நீண்ட கால இடைவெளிக்குப் பின் இணைகிறது. படத்தின் பெயர் 'கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி'. தந்தை- மகன் உறவு பற்றிய நெகிழ்ச்சி மிகுந்த இக்கதையின் நாயகனாக நாசர் நடிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசைஞானி இளையராஜாவும் நாசரும் இணையும் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசை அனுபவத்தை மறுபடியும் அளிக்கும் என்று நம்புகிறோம் என படத் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

நாசர் நாயகனாக நடித்து இயக்கி, இளையராஜா இசை அமைத்த படம் 'அவதாரம்'. 'தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..' இந்த பாடல் ஒலிக்காத நாளில்லை.., மேடையில்லை.. அப்படிபட்ட கூட்டணி இணைவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தை தனபால் பத்மநாபன் எழுதி இயக்குகிறார்.

மொழி விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த சிலர் சர்ச்சைகளைக் கிளப்பினர். இருப்பினும் கமல் தான் கூறியது சரி என்று மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். இந்நிலையில் நடிகர் சிவராஜ் குமார் திரைத்துறையில் 40}வது ஆண்டை தொடங்குவதற்கு வாழ்த்துத் தெரிவித்துப் பேசியிருக்கிறார் கமல்.

'சிவராஜ்குமார் எனக்கு ஒரு மகனைப்போல; நான் அவருக்கு சித்தப்பா. ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டின அன்பு எதிர்பாராத அன்பு.சிவான்னாவை பொருத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடிச்சுன்னு எனக்கு தெரியல. இன்னிக்கு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக்கொண்டிருக்கிற விஷயம்... இனியும் சாதிக்கக்கூடிய விஷயம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.' என்று வாழ்த்திப் பேசியிருக்கிறார்.

சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'குபேரா' இம்மாதம் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷுடன் நாகார்ஜூனா, ராஷ்மிகா உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.

ரிலீஸையொட்டி அடுத்தடுத்து நிகழ்வுகளை படக்குழுவினர் நடத்தி வருகின்றனர். ராஷ்மிகா மந்தனா பேசுகையில், 'இதுவரை நான் செய்த படங்களிலிருந்து 'குபேரா' படத்தின் இந்தக் கதாபாத்திரம் வேறுபட்டதாக இருக்கும்.

படங்களில் நடிக்கும்போது என்னை முழுமையாக இயக்குநர்களிடம் ஒப்படைத்துவிடுவேன். ஒவ்வொரு இயக்குநர்களுக்கு அந்தந்த கதாபாத்திரங்களை எப்படி கொண்டு வர வேண்டும் என யோசித்து வைத்திருப்பார்கள்.

குப்பைகள் இருக்கும் இடத்தில் ஆறு மணி நேரம் படப்பிடிப்பு நடத்தியதுதான் இப்படத்தின் நடிகராக எனக்கு பெரிய விஷயமாக அமைந்தது.' என்றவர், ' நான் நம்பர் 1 நடிகை என நீங்கள் சொல்லும்போது எனக்கு கொஞ்சம் பிரஷராகதான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com