மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

எண்பது வயது வரை மகிழ்ச்சியாக வாழ..!

மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் சுமார் எண்பதாகியுள்ளது. "வாழும் ஆண்டுகளில் மகிழ்ச்சியாக வாழ என்னென்ன செய்ய வேண்டும்' என்பதை மனநல மருத்துவர் ஹிடேகி வாடா எழுதியிருக்கும் 'தி 80-இயர்-ஓல்ட் வால்' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News image
Updated On :11 மே 2025, 12:05 am IST

மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் சுமார் எண்பதாகியுள்ளது. "வாழும் ஆண்டுகளில் மகிழ்ச்சியாக வாழ என்னென்ன செய்ய வேண்டும்' என்பதை மனநல மருத்துவர் ஹிடேகி வாடா எழுதியிருக்கும் 'தி 80-இயர்-ஓல்ட் வால்' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியிடப்பட்டவுடன், ஐந்து லட்சம் பிரதிகள் விற்பனையாகியது.

அறுபது முதல் எண்பது வயதானவர்கள் "மகிழ்ச்சியான மனிதர்" என திகழ நூலில் பட்டியலிடப்பட்டுள்ள 44 விஷயங்கள்:

தொடர்ந்து நடக்கவும்.

கோபமாக இருக்கும்போது ஆழ்ந்த மூச்சை எடுங்கள்.

உடல் சோர்வடையும் வரை முடிந்தவரை உடற்பயிற்சி செய்யுங்கள்.

கோடையில் ஏ.சி. பயன்படுத்தினால், நிறைய தண்ணீர் குடிக்கவும்.

டயாப்பர்களை பயன்படுத்துவது இயற்கைக் கடன் இயக்கங்களை எளிதாக்கும்.

அடிக்கடி நடப்பது உடலையும் மூளையையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

மறதியானது வயது முதிர்ச்சியால் அல்ல; மாறாக மூளையை நீண்ட நேரம் பயன்படுத்தாததால் ஏற்படுகிறது.

அதிக மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.

ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை செயற்கையாகக் குறைக்க வேண்டிய அவசியமில்லை.

தனியாக இருப்பது தனிமை அல்ல; ஆனால் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவது செலவும் அல்ல.

சோம்பேறியாக இருப்பது வெட்கக்கேடானது அல்ல.

வயதானவர்கள் வாகனம் ஓட்டுவது ஆபத்தானது.

நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யாதீர்கள்.

வயதாகும்போதும் அனைத்து இயற்கையான ஆசைகளும் அப்படியே இருக்கும்.

வீட்டில் இருக்காதீர்கள்.

விரும்பியதைச் சாப்பிடுங்கள், கொஞ்சம் கொழுப்பாக இருப்பது பரவாயில்லை.

எல்லாவற்றையும் கவனமாகச் செய்யுங்கள்.

உங்களுக்குப் பிடிக்காதவர்களைத் தவிர்க்கவும்.

எப்போதும் டி.வி. பார்க்காதீர்கள்.

இறுதிவரை நோயுடன் போராடுவதைவிட அதனுடன் வாழ கற்றுகொள்ளுங்கள்.

"கார் மலை ஏறினாலும் பாதை கிடைக்கும்" என்ற மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள்.

புதிய பழங்கள், சாலட்டுகளைச் சாப்பிடுங்கள்.

பத்து நிமிடங்களில் குளியலை முடிக்கவும்.

உங்களால் முடியாவிட்டால் உங்களை நீங்களே தூங்கக் கட்டாயப்படுத்தாதீர்கள்.

மகிழ்ச்சியான விஷயங்களைச் செய்வது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

 உங்கள் மனதுடன் பேசுங்கள். அதிகமாக யோசிக்காதீர்கள்.

 ஒரு குடும்ப மருத்துவரை முடிவு செய்யுங்கள்.

மிகவும் சகிப்புத் தன்மையுடன் இருக்காதீர்கள். கொஞ்சம் "கெட்ட கிழவன்', குறும்புக்காரனாக இருப்பது பரவாயில்லை.

 சில நேரங்களில் உங்கள் மனதை மாற்றி, உங்கள் பிடிவாதத்தைக் கைவிடுவது பரவாயில்லை.

 வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் "டிமென்ஷியா' (மறதி) என்பது கடவுளின் ஆசீர்வாதம்.

 நீங்கள் கற்றுகொள்வதை நிறுத்தும்போது, உண்மையில் வயதாகிவிடுவீர்கள்.

 புகழுக்கான ஆசையை விட்டுவிடுங்கள். உங்களிடம் இருப்பதே போதுமானது.

அப்பாவித்தனம் என்பது முதியவர்களின் பாக்கியம்.

 பிரச்னைகள் அதிகமாக இருந்தால், வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

 வெயிலில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தரும்.

மற்றவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.

நிம்மதியாக வாழுங்கள்.

 ஆசையே நீண்ட ஆயுளுக்கு ஆதாரம்.

எப்போதும் நேர்மறையாக இருங்கள்.

 சுதந்திரமாக சுவாசிக்கவும்.

 வாழ்க்கையின் விதிகள் உங்கள் கைகளில் உள்ளன.

எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுகொள்ளுங்கள்.

 மகிழ்ச்சியான மக்கள் எப்போதும் நேசிக்கப்படுகிறார்கள்.

சிரிப்பு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.