சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

உலகை இணைக்கும் நடனம்

பாலே என்பது கலைநயமிக்க நடன வடிவமாகும்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 10:34 pm

பொ.ஜெயச்சந்திரன்

பாலே என்பது கலைநயமிக்க நடன வடிவமாகும். இது 15ஆம் நூற்றாண்டில் இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின்போது, அரசவைகளில் பொழுதுபோக்காகத் தோன்றியது. பின்னர் பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் விரிவடைந்து, மேடை நடனக் கலையாக வளர்ந்தது.

இந்த நடனத்தில் உடல் அசைவுகள் துல்லியமாகவும், ஒழுக்கமாகவும் இருக்கும். நடனத்தின் பெரும்பாலான கலைச்சொற்கள் பிரெஞ்சு மொழியிலேயே இன்றும் பயன்

படுத்தப்படுகின்றன. பெண் நடனக் கலைஞர்கள் பெரும்பாலும் கால் விரல் நுனியில் நின்று ஆடுவதற்காக பிரத்யேகமான 'பாயின்ட் ஷூக்களை பயன்படுத்துகின்றனர். இசை, ஆடை அலங்காரம், மேடை அமைப்புகளின் உதவியுடன் ஒரு கதையையோ அல்லது உணர்ச்சியையோ வெளிப்படுத்தும் நாட்டிய நாடகமாக அமைகிறது. தற்போது இந்த நடனம் உடல் ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சியாகவும் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இவற்றைப் பயிற்சி செய்யும்போது முதுகை நேராக வைப்பதும், சமநிலையைப் பேணுவதும் அவசியமானது.

பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றான பாலே நடனத்தில் சிறந்து விளங்கியவர் பிரான்ஸ் நாட்டின் நடனக் கலைஞர் ஜீன் ஜார்ஜ் நூவர். இவரது நடனக் கலையின் சிறப்பை கெளரவிக்கும் வகையில், இவரது பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் தேதியை சர்வதேச நடன தினமாக நடனக் கலைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த நாளில் வரலாற்று நிகழ்வுகளை நடத்தவும், பல்வேறு நாட்டியப் பள்ளிகள் தயாராகி வருகின்றன. இந்தச் சமயத்தில் நடனக்கலை குறித்து நடன ஆசிரியர்கள் சிலர் கூறியது:

கலைமாமணி லட்சுமி ராமசாமி, நடன இயக்குநர், ஸ்ரீமுத்ராலயா பள்ளி, கோட்டூர்புரம், சென்னை உடல் அளவில் மட்டுமல்லாது மனம், எண்ணம், கருத்து ஆகியவற்றிலும் பயணித்து, அதனை வாழ்வின் ஓர் அங்கமாக எடுத்துச் செல்லும் வகையில் பாலே நடனம் விளங்குகிறது.

கோயில் அமைப்புகள், புராண இதிகாசங்கள், ஆடல், நட்டுவாங்கம், அரங்கமேடை, விளக்குகளின் அமைப்பு, நாட்டியம் சார்ந்த இலக்கணஇலக்கியங்கள் என இந்த நாட்டியத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

'தமிழ்நாட்டில் பொற்காலம் என்று அழைக்கப்படும் சோழர் காலத்தில் ஓவியம், சிற்பம். இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் நன்கு வளர்க்கப்பட்டன. அப்போது கோயில்களில் மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் நடன வகைகள் செதுக்கப்பட்டன. கண்ணுக்கும், கருத்துக்கும், மனதுக்கும், ஏன் ஆத்ம தேடலுக்கும் விடை தரும் கலை நமது பாரம்பரியமான பரதக் கலை.

உடலில் தொடங்கி, மனதில் இறங்கி, கருத்தில் துலங்கி, ஸ்ருதியில் தோய்ந்து கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கும் ரசனையின் பரிமாணங்களை எடுத்துச் செல்லும் வல்லமை கொண்டது. பாரதத்தில் கலைகள் பலவும் இப்படிப்பட்ட உன்னத எண்ணங்களின் நிலைப்பாட்டை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வீச்சு கொண்டவை.

சுமதி கனகசபாபதி, தரணா நடனப் பள்ளியின் நிறுவனர், மலேசியா நடனக்கலை அறம்பொருள்இன்பம், வீடு என மனித வாழ்க்கையின் நான்கு உன்னத இலக்குகளை குறிக்கோளாகக் கொண்டது. மன உறுதி, உடல் வளம், இன்ப உணர்ச்சி முதலிய நற்பண்புகளை அளிக்க வல்லது. இக்கலை தரும் இன்பம் தவத்தினர் அடையும் இன்பத்துக்கு இணையானது.

ரெனி.சி.பால் நர்த்தனா நாட்டியப் பள்ளி, திருப்பத்தூர் நடனம் பன்முகத்தன்மை கொண்டது. அது தனக்குள் அழகியல், படைப்பாற்றல், அன்பு, வலிமை, மகிழ்ச்சி, சோகம், கோபம் என எல்லாவற்றையும் வைத்திருக்கிறது.

Story image

வேலன் ஆடும் வெறிக்கூத்து, வென்ற வீரர் தம் அடையாளப் பூச்சூட்டி ஆடும் கருங்கூத்து, வெற்றியைப் பாராட்டிப் பெண்கள் ஆடும் வள்ளிக் கூத்து, களத்தை விட்டு ஓடாத இளைய வீரனுக்குக் காலில் கழலைக்கட்டி இருபாலரும் ஆடும் கூத்து எனப் பழந்தமிழர்களிடம் பல கூத்து வகைகள் இருந்தன. இவை பெரும்பாலும் போர்த் தொடர்பானவை. இவையின்றி ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி முதலிய வகைகளும் இருந்தன.

குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகப் பெருமானை வழிபட்டு பெண்கள் ஆடும் கூத்து 'குன்றக் குரவை அல்லது குரவை எனப்படும். இதுவே முல்லை நில மகளிரால் மாயோனைத் துதித்து ஆடப்படுமாயின், 'ஆய்ச்சியர் குரவை எனப் பெயர் பெறும். எங்கள் நடனங்களில் சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை அழகாகப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறோம். பார்வையாளர்களின் ரசனையும், சிந்தனைகளையும் மேம்படுத்துவதைக் கலைஞர்களின் கடமையாக நினைக்கிறேன்.

லாவண்யா செந்தில்வேல், நடராஜா நாட்டியப் பள்ளியின் நிறுவனர், சென்னை தமிழகப் பகுதிகள் நாயக்கராலும், மராட்டியராலும் ஆளப்பட்ட காலத்தில் கர்நாடக இசை சிறந்து விளங்கியது. சங்க காலத்தில் சிறப்புற்றிருந்த கூத்துக்கலை பல்லவர் காலத்தில் வளர்ச்சி பெற்றது.

முதலாம் மகேந்திரன் கூத்துக் கலையில் பெரிதும் ஈடுபாடுடையவன் என்பதை உறுதிப்படுத்த சித்தன்னவாசல் நடன மாதர் ஓவியங்களே சான்றாகும். அவர் இயற்றிய மத்த விலாசப் பிரகசனம் என்னும் வேடிக்கை நாடக நூலில் 'சிவனார் ஆடிய தாண்டவ நடனம் மூவுலங்களையும் ஒருமைப்படுத்த வல்லது என்று பாராட்டியுள்ளார்.

நடனக்கலையில் ஈடுபாடு கொண்ட இராசசிம்மன், தான் கட்டுவித்த கயிலாசநாதர் கோயிலில் சிவனார் ஆடிய பதாகை நடனம், லதாவிருச்சிக நடனம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் முதலிய நடன வகைகளை கலைச் சிற்ப அமைப்பில் காட்டி அழியாப் புகழ் பெற்றார். நடனத்தை உலகை இணைக்கும் மொழியாகக் கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.